Tuesday, December 27, 2011

மென்பொருட்களின் பழைய பதிப்பை (Old Versions) download செய்ய தளங்கள்


புதிய புதிய மென்பொருட்கள் வந்து கொண்டிருக்கின்றன.
ஒரு சில புதிய பதிப்பு மென்பொருட்களில் வசதிகள் நிறைய இருந்தாலும் உபயோகிப்பதில் சில சிரமங்கள் ஏற்படலாம். புதிய வசதிகள் பெறலாம் என்று பழைய பதிப்பை அழித்து புதிய பதிப்புகளை செய்துவிட்டு பழைய பதிப்புகள் எங்கு சென்று தேடுவது என்று நினைப்பவர்களுக்கு இதோ ஒரு வழி. அவ்வாறு பழைய பதிப்பு கொண்ட சில தளங்களை தளங்களை பற்றி இங்கு காண்போம்
1. http://www.oldversion.com/
2. http://www.oldapps.com/
3. http://www.321download.com/LastFreeware/index.html
4. http://old-versions.net/
5. http://www.oldware.org/
6. http://www.downloadoldversions.com/
இந்த தளங்களுக்கு சென்று உங்களுக்கு தேவையான
பழைய பதிப்பு மென்பொருட்களை download செய்துகொள்ளுங்கள்

TURN ON YOUR PC IN 10 SECONDS (EASY METHOD )

Click on the start button then -->> go to Run
then type Regedit
press Enter
this will open Registry Editor
now look for the key

HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\ContentIndex

Find a Key Called "Startup Delay".Double Click On It
Now where its Base,Click Decimal its Default Value Is 4800000 (75300:hexadecimal)
Change The Value To 40000.Thats All
Now close the Registry Editor and Restart Your Computer..!
You'll See a Difference

இலவச MP3 ஆல்பம் எடிட்டர்



ஆடியோ காசட்களிலும் , பெரிய வானொலிப் பெட்டிகளிலும் (radio)பாடல்கள் கேட்ட காலம் போய் இன்று அனைவரும் mp3 பிளேயர் , ஐபோட் போன்ற சாதனங்களுக்கு மாறி விட்டனர் . இதில் பாடல்கள் கேட்பதும் சேமித்து வைப்பதும் மிக மிக எளிது .1000 திற்கும் மேற்பட்ட பாடல்களை நம் கைக்குள் வைத்திருப்பது அறிவியலின் அரிய கண்டுபிடிப்பாகும்



.இவ்வகையான சாதனங்களில் சில நேரம் நமக்கு பிடித்த பாடல்களை தேடுவது கடினமாக இருக்கும் .இது ஏன் என்றால் தமிழ் mp3 பாடல்களை நாம் தரவிறக்கும் போது , இணையதளங்கள் அந்த பாடலில் அவர்கள் பெயரை போட்டு விடுவர் . உதாரணமாக எந்திரன் பாடலில் ஆல்பம் பெயர் எந்திரன் என்று இருக்கும் அனால் உள்ளே பாடல்களின் பெயரோ (www .tamilmp3world .com ) என்று இருக்கும்
. எனவே நாம் குறிப்பிட்ட பாடலை தேர்வு செய்வது சிறிது குழப்பமாக இருக்கும் . இந்த தொல்லையை போக்குவதற்காகவே Mp3 tag எடிட்டர் என்ற மென்பொருள் உள்ளது . இதில் நீங்கள் சுலபமாக ஒரே நேரத்தில் 1௦௦௦ திருக்கும் மேற்பட்ட பாடல்களின் artist name , album name , year போன்ற பகுதிகளை எளிதாக மாற்றலாம் .தீவிர இசை பிரியர்கள் மற்றும் ஆடியோ ரெகார்டிங் தொழில் செய்யும் நண்பர்களுக்கு இது மிகவும் அவசியமான ஓர் மென்பொருள் . கீழே சொடுக்கி தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .

வெப்சைட்டுக்கு Video

யு–ட்யூப் ஒன்றுதான் உங்கள் வீடியோக்களை இணையத்தில் பதிவு செய்திட அனுமதிக்கும் தளம் என்று நினைத்தால் அது தவறு. வீடியோவினைப் பகிர்ந்து கொள்ள, இன்னும் பல, ஏன் சிறந்த, வீடியோ தளங்கள் உள்ளன. அது மட்டுமின்றி உங்கள் வீடியோக்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்கும் தளங்களும் உள்ளன.

அருமையான வீடியோ ஒன்றை தயாரித்து இருக்கிறீர்கள். உங்களிடம் நண்பர்கள் சிலரிடம் போட்டுக் காட்டுகிறீர்கள். அவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்த உலகமும் காணட்டுமே என்று நினைக்கிறீர்கள். அந்த எண்ணம் தோன்றியவுடன் உங்கள் நினைவில் வருவது யு–ட்யூப் இணைய தளமே. அதில் உங்கள் வீடியோவை ஏற்றி வைத்துவிட்டால் உலகெங்கும் உள்ளவர்கள் அதனைப் பார்த்து மகிழலாம்


அதிர்ஷ்டம் இருந்தால் பலர் உங்களைத் தொடர்பு கொண்டு இன்னும் சில வீடியோ படங்களைத் தங்களுக்கு எடுத்துத் தருமாறு கேட்கலாம். இதனால் பணம் சம்பாதிக்கவும் செய்திடலாம். ஆனால் ஏன் யு–ட்யூப் தளத்தை மட்டும் நாடுகிறீர்கள். என்றாவது இதைப் போல வேறு சில தளங்களும் உள்ளன என்று எண்ணியதுண்டா? வேறு இருக்கிறதா! என்று கண்கள் அகல விரிய நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது. இதோ அத்தகைய தளங்களைப் பற்றிய தகவல்களைத் தருகிறேன்.

1. www.break.com : முதலில் பணம் மற்றும் பரிசு தரும் தளத்தைப் பற்றிப் பார்ப்போம். இந்த தளத்தில் ஏற்றப்படும் உங்கள் வீடியோ இத்தள நிர்வாகிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் ஹோம் பேஜில் அது இடம் பெற்றால் உங்களுக்குக் கிடைக்கும் பரிசு ரூ.80,000. தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் காலரியில் வீடியோவோடு வீடியோவாக இடம் பெற்றால் பரிசு ரூ.1,000. இதில் வீடியோக்கள் பிரிக்கப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் நமக்குப் பிடித்த வீடியோவினைத் தேடிப் பெறுவது எளிதாகிறது. மிக எளிமையான கண்ட்ரோல்கள் தரப்பட்டிருப்பது இன்னும் சிறப்பு. காண்ட்ராஸ்ட், பிரைட்னஸ் என வீடியோக்களைக் கண்ட்ரோல் செய்து பார்க்கலாம். நம்முடைய வீடியோக்களை அப்லோட் செய்வதும் எளிதாக்கப் பட்டுள்ளது.


2.www.tubemogul.com அடிப்படையில் இது ஆன்லைன் வீடியோ க்களை ஆய்வு செய்திடும் நிறுவனத்தின் இணைய தளம். இதன் மூலம் தங்களின் வீடியோக்களின் தரத்தினை மக்கள் அறிந்து கொள்ள இயலும். இதன் இன்னொரு சிறப்பு என்னவெனில் இதன் மூலம் மற்ற வீடியோ தளங்களுக்கும் வீடியோக்களை ஒரே ஷாட்டில் அப்லோட் செய்திட முடியும்.
அது மட்டுமின்றி உங்கள் வீடியோவை யார், எப்போது, எங்கிருந்து பார்க்கிறார்கள் என்பதனையும் நீங்கள் அறிந்து கொள்ள முடியும். யு–ட்யூப், கூகுள் வீடியோ, ஏ.ஓ.எல். வீடியோ, மை ஸ்பேஸ் வீடியோ, மெடாகேப், ரெவ்வர் மற்றும் யாஹூ வீடியோ ஆகிய தளங்களை இந்த தளத்தின் மூலம் பெறலாம்.

3. www.dailymotion.co: மற்ற வீடியோ இணைய தளங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டும் பல பண்புகளைக் கொண்டது இந்த தளம். இதில் பல சேனல்கள் உள்ளன; அவை – மியூசிக், கேம்ஸ், விளையாட்டு, படங்கள், கல்லூரிகள் என பட்டியல் நீள்கிறது. இதன் பபர் ரேட் அதிகமானதாக இருப்பதால் வீடியோவினை எந்த பிரச்னையுமின்றி பார்க்க முடிகிறது. வீடியோ வால்ஸ் என்ற வசதியின் மூலம் உங்கள் தளத்தில் 81 வீடியோக்கள் வரை காட்டலாம். ஜூக் பாக்ஸ் வீடியோக்களை வகைப்படுத்திக் காண வழி செய்கிறது. இந்த தளத்தில் பதிக்கப்படும் வீடியோக்களை உங்கள் நண்பர்கள் மட்டும் காணும்படியும் செட் செய்திடலாம்.


4. www.dailymotion.com: இந்த தளத்தைப் பற்றி சிலர் அறிந்திருக்கலாம். இதில் உள்ள பபர் மெமரி குறிப்பிடத்தக்கது. வீடியோக்களை ரீவைண்ட் செய்தும் பாஸ்ட் பார்வேர்ட் செய்தும் பார்க்கும் வசதி இந்த தளத்திலேயே தரப் பட்டுள்ளது. இதில் உள்ள பேமிலி சேப் மோட் உங்கள் குழந்தைகள் என்ன வகையான வீடியோ மட்டும் பார்க்க வேண்டும் என்பதனை வரையறை செய்திடும் வசதியினைத் தருகிறது. இதில் உள்ள டைரக்டர்ஸ் கட் வீடியோ தயாரிப்பதில் தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு உதவுகிறது. இந்த சேனலில் உள்ள மெட்டகபே புரோ வீடியோ தயாரிப்பது குறித்த தகவல்களைத் தருகிறது.இதில் உள்ள அப்ளிகேஷன் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தால் எந்தவித வெப் பிரவுசர் இன்றி நேரடியாக வீடியோக்களை அனுப்ப முடியும்.

5. www.jumpcut.com : வீடியோ தளங்களில் உங்கள் வீடியோக்களை அப்லோட் செய்திடுகையில் வீடியோக்
களை எடிட் செய்வதற்கான டூல்ஸ்கள் இருந்தால் நல்லது என்று எண்ணுகிறீர்களா! அப்படியானால் இந்த தளம் தான் உங்களுக்கு உகந்தது. இதில் உள்ள ரீமிக்ஸ் என்ற வசதியினைப் பயன்படுத்தி உங்கள் வீடியோக்களை மட்டுமல்ல, மற்றவர்களின் வீடியோக்களையும் கூட எடிட் செய்து பார்க்கலாம்.


பேக்ரவுண்ட் மியூசிக், திடீர் மாற்றங்கள், காட்சிஅமைப்பு, கிளிப் ஆடியோ மற்றும் காட்சி தோற்றங்கள் ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்த இதில் டூல்ஸ் தரப்பட்டுள்ளன. இந்த தளத்தில் உங்கள் யாஹூ ஐ.டி. மூலமும் லாக் இன் செய்து கொள்ளலாம். இல்லை என்றாலும் இதில் பதிவு செய்வது எளிதுதான்.


6. www.revver.com: வீடியோ ஷேரிங் வெப்சைட்டாக இயங்கிய முதல் வெப்சைட் இதுதான். இதில் வெபிஸோட், அனிமேஷன், காமெடி, கேம்ஸ் மற்றும் வீடியோஸ் எனப் பிரிவுகள் உள்ளன. உங்கள் வீடியோக்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்குப் பிடித்த மற்ற வீடியோக்களையும் இதில் நீங்கள் அப்லோட் செய்திடலாம். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் உங்களுக்கும் பங்கு தரப்படும். வீடியோக்களை அடிக்கடி பார்த்தது, பலரால் பகிர்ந்து பார்த்தது மற்றும் வீடியோவினை இயக்கியவர் என பதம் பிரித்துப் பார்க்கலாம். அதே போல இதன் சேனல்களும் வித்தியாசமானவை; பிரபலமானவர்கள் செய்தி, உடல்நலம் மற்றும் உடல் பாதுகாப்பு, தொழில் நுட்ப உதவி, வெபிசோட்ஸ் எனப் பல பிரிவுகளில் வீடியோக்கள் உள்ளன.


7. www.vimeo.com: மொத்தம் 6,340 சேனல்களை உள்ளடக்கியதாக இந்த தளம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பல பொருட்களின் அடிப்படையிலும் நம் ஆர்வத்தின் அடிப்படையிலும் பல வீடியோக்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டாப் பிக்ஸ்(Staff Picks) என்ற பிரிவில் இந்த இணையதள அலுவலர்கள் தங்களுக்கு பிடித்தது எனத் தேர்ந்தெடுத்தவற்றைக் காணலாம்.


8. www.eyespot.com: இந்த தளத்தில் உங்கள் வீடியோக்களை அப்லோட் செய்திடும் முன் அவற்றை எடிட் செய்திடலாம். போட்டோக்கள் மற்றும் மியூசிக் இணைத்து மாற்றலாம். உங்களிடம் வீடியோ இல்லை என்றால் இதில் பதிந்துள்ள வீடியோக்களை எடுத்து எடிட் உங்கள் கற்பனைத் திறனுக்கேற்ற வகையில் மாற்றலாம். இதற்கென மிக்ஸபிள்ஸ், ரீசன்ட் மிக்ஸஸ், ரீசன்ட் அப்லோட்ஸ், மோஸ்ட் ஸ்கில்புல் மற்றும் மொபைல் ஷேர் எனப் பல வகைகளில் வீடியோக்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. உங்கள் மொபைல் போனில் வீடியோக்களை எடுத்து நேரடியாக இந்த தளத்திற்கு வீடியோ படங்களை அனுப்பலாம். ஆனால் அனைத்து போன்களையும் இந்த தளம் ஏற்றுக் கொள்வதில்லை. நோக்கியா போன்களில் இ மற்றும் என் சிரீஸ் போன்களின் வீடியோக்களை மட்டும் ஏற்றுக் கொள்கிறது.


9. www.video.google.com: யு–ட்யூப் தளத்தின் இன்னொரு சகோதரி போல இது செயல்படுகிறது. யு–ட்யுப் தளத்தின் அத்தனை சங்கதிகளும் இதில் இருக்கின்றன. நீங்கள் அப்லோட் செய்த வீடியோக்களை நாள், மாதம் மற்றும் ஆண்டு வாரியாகப் பட்டியலிட்டு பார்க்கலாம்.


10. www.funnyordie.com: விழுந்து விழுந்து சிரிக்க வேண்டுமா? இந்த தளத்திற்குச் செல்லுங்கள் என்று இந்த தளம் அழைத்தாலும் பல சீரியஸ் வீடியோக்களும் இதில் உள்ளன. சில நகைச்சுவை நிகழ்ச்சிகள் படங்களாய்க் காட்டப்படுகின்றன. மேலே தரப்பட்ட தளங்களில் சில மற்றவற்றிலிருந்து வேறுபட்டுள்ளன. அதிக அளவிலான (300 எம்பி) வீடியோ பைல்களை ஏற்றுக் கொள்வது ட்யூப் மொகல் தளம். விமியோ தளம் வாரத்திற்கு 500 எம்பி அனுமதிக்கிறது. ட்யூப் மொகல் தவிர மற்ற தளங்கள் அனைத்தும் ஷேரிங் வசதியைத் தருகிறது. மெடா கேப் மற்றும் ரெவ்வர் மட்டுமே டவுண்லோடிங் வசதியைத் தந்துள்ளன. பரிசு மற்றும் பணம் தருவது பிரேக் தளம் மட்டுமே. அனைத்திலும் பதிந்து கொள்வதும் வீடியோக்களை அப்லோட் செய்வதும் இலவசமே.

விண்டோஸின் தொல்லைகள்

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முற்றிலும் முழுமையான பாதுகாப்பான சிஸ்டம் இல்லை என்பது கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரியும். பல வேளைகளில் தேவையற்ற தொல்லைகளை விண்டோஸ் அளித்திடும். சில வேளைகளில் அவை சிறுவர்களின் சில்மிஷங்கள் போல் தோற்றமளித்திடும். இருந்தும் வேறு வழியின்றி அவற்றைப் பொறுத்துக் கொள்வோம். எடுத்துக் காட்டாக நாம் மறதியாய் ஒரு பிளாப்பி டிஸ்க்கை அதன் டிரைவில் விட்டிருப்போம்.

அடுத்த முறை விண்டோஸை இயக்கும்போது NonSystem Disk or disk error

இருந்தாலும் இது ஒரு தொல்லை தானே. இப்படி விண்டோஸ் கொடுக்கும் தொல்லைகள் சிலவற்றையும் அவை எதனால் ஏற்படுகிறது என்பதனையும் அவற்றை எப்படி சமாளிக்கலாம் என்பதனையும் இங்கு காணலாம்.

1. நகராத மவுஸ் கர்சர்: திடீரென கம்ப்யூட்டர் இயக்கம் உறைந்து போகும். மவுஸ் கர்சர் நகராது. என்ன செய்தாலும் ஒன்றும் இயங்காது. கண்ட்ரோல் + ஆல்ட்+ டெலீட் அழுத்தினாலும் ஒன்றும் இயங்காது. வேறு வழியின்றி ரீ பூட் பட்டனை அழுத்தி மீண்டும் இயங்க வைப்போம். இதற்கு என்ன காரணம்? பெரும்பாலும் நீங்கள் புதியதாக கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த புரோகிராமாக இருக்கும். எனவே மீண்டும் கம்ப்யூட்டரை ரீ பூட் செய்தவுடன் கடைசியாக இன்ஸ்டால் செய்த புரோகிராமினை அன் இன்ஸ்டால் மூலம் நீக்கவும். மீண்டும் அதே உறையும் பிரச்னை வரவில்லை என்றால் இந்த புரோகிராம் காரணமாக இருக்கலாம். இன்னொன்றையும் நீங்கள் கவனிக்க வேண்டும். நீங்கள் வயர்லெஸ் மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் மவுஸின் பேட்டரி உயிருடன் இருக்கிறதா என்று பார்க்கவும்.பேட்டரியை மாற்றிப் பார்க்கவும். ஒரு வேளை மவுஸ் கர்சர் நகரலாம்.

2. திடீரென ரீஸ்டார்ட்: பயன்படுத்திக் கொண்டிருக்கும்போதே திடீரென கம்ப்யூட்டர் தானே ரீஸ்டார்ட் ஆகும். கம்ப்யூட்டர் திரை கருப்பாக தோன்றி விண்டோஸை எவ்வாறு ஸ்டார்ட் செய்திட என்ற கேள்வியுடன் நான்கு ஆப்ஷன்ஸ் தரப்படும். அங்கு Start Windows Normally என்ற பிரிவைக் கிளிக் செய்திடவும். கம்ப்யூட்டர் வழக்கம்போல இயங்கத் தொடங்குகிறதா என்று பார்க்கவும். தொடங்கவில்லை என்றால் Last Known good configuration என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதுவும் சரியாகவில்லை என்றால் Safe Mode ல் தொடங்கவும். இது நிச்சயம் செயல்படத் தொடங்கும். இதனைப் பயன்படுத்தி முன்பு சொன்னது போல இறுதியாக இன்ஸ்டால் செய்த புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்திடவும்.

3. தொடக்கத்தில் சொன்ன NonSystem Disk or disk error என்ற பிரச்னை ஏற்படுகையில் டிரைவில் உள்ள டிஸ்க்கினை நீக்கினாலும் சில வேளைகளில் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது. அப்படி என்றால் பிரச்னை மிகவும் சிக்கலானது தான். கம்ப்யூட்டரின் சிபியு கேபினைக் கழற்றி ஏதேனும் கேபிள் வயர் சரியாக இணைக்கப்படாமல் இருக்கிறதா என்று பார்க்கவும். குறிப்பாக ஹார்ட் டிஸ்க்கிற்குச் செல்லும் கேபிள் சரியாக இருக்கிறதா எனப் பார்க்கவும். அதனைச் சரி செய்தும் பிரச்னை தீரவில்லை என்றால் ஒரு ஹார்ட் வேர் டெக்னீஷியனை அழைத்துப் பார்க்கவும்.

4. One of your disks needs to be checked for consistency : கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கும்போது இந்த செய்தி திரை முழுவதும் ஊதா வண்ணத்தில் வெள்ளை எழுத்துக்களில் தோன்றும். இந்த செய்தி வந்தால் அதற்கு முன் கம்ப்யூட்டரை இயக்கிய போது முறையாக அதன் இயக்கத்தினை நிறுத்தவில்லை என்று பொருள். அல்லது புரோகிராம் கிராஷ் ஏற்பட்டிருக்கலாம். அல்லது பவர் கட் ஆகி யு.பி.எஸ். கை கொடுக்காமல் கம்ப்யூட்டர் ஆப் ஆகி இருக்கலாம். இது போன்ற செய்திவந்து உங்கள் டிஸ்க்கைச் சோதிக்கும் பணி தொடங்கினால் அதனை நிறுத்த வேண்டாம். ஒரு சில நிமிடங்களில் இந்த சோதனை முடிந்து கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும். இது உங்கள் ஹார்ட் டிஸ்க் சரியாக உள்ளதா என்ற சோதனை என்பதால் உங்கள் கம்ப்யூட்டருக்கும் நல்லதுதான்.

ஆனால் ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரை இயக்கத் தொடங்கும் போதும் இந்த செய்தி வந்தால் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை நீங்கள் ஷட் டவுண் செய்திட நடவடிக்கைகள் எடுக்கையில் பின்புலத்தில் ஏதோ ஒரு புரோகிராம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று பொருள். எனவே ஷட் டவுண்ட் செய்வதற்கு முன்னால் கண்ட்ரோல் + ஆல்ட்+டெலீட் போட்டு எந்த எந்த புரோகிராம்கள் நீங்கள் அறியாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்று பார்த்து அவற்றை நிறுத்தவும். அவை மீண்டும் தாமாக இயங்குவதனை நிறுத்தவும்.

5. Blue Screen of Death: ஆம், இப்படி ஒரு திரை நம் கம்ப்யூட்டரில் சில வேளைகளில் ஏற்படும். A fatal exception 0E has occurred என்று தொடங்கி அப்போது இயங்கிய அப்ளிகேஷன் புரோகிராமினை உடனே முடக்கிவிடு என்று கேட்கும். கண்ட்ரோல் + ஆல்ட்+டெலீட் கொடுத்து கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடச் சொல்லும். "நீங்கள் சேவ் செய்யாத தகவல் எல்லாம் அவ்வளவுதான் அம்போ' என்று ஒரு மிரட்டும் செய்தியும் வரும். என்ன செய்வது? வேறு வழியே இல்லை. போனால் போகட்டும் போடா ! என்று மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதுதான். இந்த டெத் ஸ்கிரீன் அடிக்கடி வந்ததென்றால் ரெஸ்டோர் பயன்படுத்தி முந்தைய ரெஸ்டோர் பாய்ண்ட்டுக்குச் செல்ல வேண்டியதுதான். இதனைப் பெற Start, Accessories, System Tools, System Restore என வரிசையாகச் சென்று பெறலாம்.

6. End Program: சின்ன விண்டோ ஒன்றில் This program ‘Program has encountered a problem’ is not responding போன்ற பிழைச் செய்தி கிடைக்கும். புரோகிராமில் எந்த பிரச்னையும் இல்லை என உறுதியாகத் தெரிந்தால் தொடர்ந்து அதனை இயக்கப் பார்க்கவும். ஆனால் ஏற்கனவே கம்ப்யூட்டர் முடங்கிப் போயிருந்தால் வேறு வழியின்றி புரோகிராமை மூடி வெளியேறி பின் மீண்டும் வரவும்.

7.‘Program has encountered a problem and needs to close’: அடிக்கடி கிராஷ் ஆகும் புரோகிராம்கள் இது போன்ற செய்தியைக் கொடுக்கும். இதை நீங்கள் ஒன்றும் செய்திட முடியாது. ஏனென்றால் ஏற்கனவே புரோகிராம் கிராஷ் ஆகிவிட்டது. இதில் Send Error Report என்ற பிரிவில் கிளிக் செய்து இன்டர்நெட் இணைப்பில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு பிழைச் செய்தி குறித்து தகவல் அனுப்பலாம். ஆனால் ஒரு சில சமயங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளத்திலிருந்து இந்த பிழை புராசசர் சிப்பினால் ஏற்பட்டது. இதற்கு இன்னும் நிவாரணம் இல்லை என்ற பதிலும் வரலாம்.

8. மெதுவாக இயங்குதல்: கம்ப்யூட்டர் வாங்கிய தொடக்கத்தில் மிக வேகமாக இயங்கிய கம்ப்யூட்டர் சில மாதங்களிலேயே மெதுவாக இயக்கத்திற்கு வரும். சி.பி.யு. பட்டனை அழுத்திய பின் விண்டோஸ் டெஸ்க்டாப் வர அதிக நேரம் பிடிக்கலாம். இதற்குக் காரணம் ஸ்டார்ட் அப் மெனுவில் நிறைய புரோகிராம்களை அமைத்திருப்பதுதான். இதனை எளிதாக சரி செய்துவிடலாம். இதற்கு ஸ்டார்ட் கிளிக் செய்து பின் ரன் விண்டோவில் msconfig என டைப் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் Starup டேப்பினைத் தேர்ந்தெடுத்து வரும் விண்டோவைப் பார்க்கவும்.

அதில் உள்ள புரோகிராம் பட்டியலைப் பார்க்கவும். உங்கள் கம்ப்யூட்டர் அத்தனை புரோகிராம்களையும் தொடங்கி பின்னணியில் இயங்கிய பின்னரே உங்களுக்கு டெஸ்க் டாப்பைக் காட்டுகிறது. எனவே எந்த எந்த புரோகிராம் உங்களுக்குத் தேவையில்லையோ அவற்றை ஸ்டார்ட் அப் பட்டியலில் இருந்து நீக்கிவிடவும். இதற்கு அந்த புரோகிராமின் முன் உள்ள சிறிய கட்டத்தில் இருந்த டிக் அடையாளத்தை எடுத்துவிட்டால் போதும்.

9. Access Denied: இந்த பிழைச் செய்தி ஒரு குறிப்பிட்ட பைலை நோக்கி காட்டப்படும். ஒரு பைலில் திருத்தங்கள் செய்திட முயன்று அவற்றை சேவ் செய்திட முயற்சிக்கையில் இந்த பிழைச் செய்தி கிடைக்கும். பைல் அது போல மாற்றங்களை மேற்கொள்ளவிடாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதனை எளிதாக ஏமாற்றலாம். குச்திஞு அண் கட்டளை கொடுத்து வேறு பெயரில் சேவ் செய்திடலாம்.

10. Missing Shortcut: சில புரோகிராம்களை கம்ப்யூட்டரிலிருந்து நீக்கும்போது டெஸ்க்டாப்பிலிருக்கும் ஷார்ட்கட் ஐகானும் நீக்கப்பட வேண்டும். சில வேளைகளில் அந்த ஷார்ட் கட் ஐகான் காட்டும் புரோகிராமினை வேறுடிரைவிற்கு மாற்றி இருப்போம். அப்போது இந்த பிழைச் செய்தி காட்டப்பட்டு Windows is searching for [File Name] To locate the file yourself click Browse என்ற செய்தி கிடைக்கும். புரோகிராம் நீக்கப்பட்டுவிட்டது என்று தெரிந்தால் இந்த ஷார்ட் கட் ஐகானையும் நீக்கிவிடுங்கள்.

11. "Can’t Boot from Windows CD”: விண்டோஸ் தொகுப்பினை ரிப்பேர், ரீ இன்ஸ்டால் அல்லது அப்கிரேட் செய்ய வேண்டியதிருந்தால் கம்ப்யூட்டரை விண்டோஸ் சிஸ்டம் சிடியிலிருது பூட் செய்ய வேண்டியதிருக்கும். ஆனால் அப்படி பூட் செய்திட முயற்சிக்கையில் இந்த செய்தி வரும். ஏன்? சிடியிலிருந்து பூட் செய்திட வகுத்திடும் வழி அடைக்கப்பட்டிருக்கும். இதனை எப்படி திறப்பது? விண்டோஸ் இயங்கத் தொடங்குகையில் Delete பட்டனை அழுத்தவும். BIOS ஸ்கிரீன் தோன்றும். அப்படித் தோன்றவில்லை என்றால் டெலீட் கீக்குப் பதிலாக F2 கீயை அழுத்தவும்.

கர்சர் கீ மூலம் பூட் செக்ஷன் சென்று என்டர் அழுத்தவும். உடன் கம்ப்யூட்டர் பூட் செய்ய எந்த வரிசையில் செயல்பட வேண்டும் என்ற வரிசை கிடைக்கும். நீங்கள் முதலில் சிடி, பின் ஹார்ட் டிஸ்க் வழியாக என்றால் அதற்கேற்ப வரிசையினை மாற்றி அமைக்கவும். வேறு எதனையும் மாற்ற வேண்டாம். இந்த மாற்றத்தை சேவ் செய்து வெளியேறி விண்டோஸ் சிடியை டிரைவில் போட்டு பின் பூட் செய்தால் கம்ப்யூட்டர் சிடி டிரைவில் உள்ள விண்டோஸ் சிடி வழியாக பூட் ஆகும்.

12. டாஸ்க் பார் பட்டனில் புரோகிராம்கள் அடுக்கு: சில வேளைகளில் ஒரே புரோகிராம்களில் பல திறக்கப்படுகையில் அவைடாஸ்க் பாரில் ஒரு பட்டனில் அடுக்கப்படும். எடுத்துக் காட்டாக வேர்ட் தொகுப்பில் பல டாகுமெண்ட்டுகள் திறக்கப்பட்டால் அவை வேர்ட் என்ற பட்டனிலேயே அடுக்கப்படும். எத்தனை புரோகிராம்கள் உள்ளன என்று எண் காட்டப்படும். இவற்றில் ஏதேனும் ஒன்றைத் திறந்து பயன்படுத்த எண்ணினால் பட்டனைக் கிளிக் செய்து பின் கிடைக்கும் அடுக்கில் நாம் விரும்பும் புரோகிராமினை கிளிக் செய்து இயக்க வேண்டும். இது நேரம் எடுக்கும் வேலை. டாஸ்க்பாரில் ஒவ்வொரு டாகுமெண்ட்டும் காட்டப் பட்டால் இந்த வேலை மிச்சமாகும். என்ன செய்யலாம்? டாஸ்க் பாரில் எங்கேனும் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுங்கள். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Group similar Taskbar buttons என்ற இடத்தில் டிக் அடையாளத்தை எடுத்து விடுங்கள். இனி பைல்கள் அடுக்கப்பட மாட்டாது.

13. Low Disk space warning: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் திடீரென திரையில் வலது மூலையில் ஹார்ட் டிஸ்க்கில் இனி ஸ்பேஸ் இல்லை என்ற பொருள் பட இந்த செய்தி கிடைக்கும். இதனால் பெரிய விபத்து இல்லை. உடனே சி டிரைவில் தேவையற்ற பைல்கள், டெம்பரரி போல்டரில் உள்ள பைல்கள் ஆகியவற்றைக் காலி செய்யவும். முக்கிய பைல்கள் இருந்தால் அவற்றை வேறு டிரைவிற்கு மாற்றவும். இவ்வாறு செய்து ஓரளவிற்கு டிஸ்க்கில் ஸ்பேஸ் உண்டாக்கினால் இந்த எச்சரிக்கை செய்தி வராது.

COMPUTER PASSWORD மறந்து போனால் சில வழி


விண்டோஸ் எக்ஸ்பி இயங்கு தளத்தில் பயனர் கணக்கை (user account) உருவாக்கி அதனை எவரும் அணுகா வண்ணம் பாஸ்வர்ட் மூலம் பாதுகாப்பளிக்கவும் முடியும் என்பது நீங்கள் அறிந்த விடயமே.

அப்படி நீங்கள் உருவாக்கும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்ட் ஒருவேளை மறந்து போனால் விண்டோஸில் டிபோல்டாக உருவாக்கப்படும் அட்மினிஸ்ட் ரேட்டர் (administrator) கணக்கு மூலம் லாக் ஓன் செய்து அதனை நீக்க முடியும். இந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குப் பாஸ்வர்ட் இட்டுக் கொள்வோரும் உண்டு. இப்போது அந்த அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக் குரிய பாஸ்வர்டும் மற்ந்து போனால் என்ன செய்வது?
அதற்கும் ஒரு தீர்விருக்கிறது. எனினும் இந்த வழிமுறை ஓரளவு சிக்கலானது. விண்டோஸைப் புதிதாக நிறுவும் முறையை அறிந்திருப்போருக்கு இது இலகுவான விடயமே.
முதலில் கணினியை இயக்கி சிடியிலிருந்து பூட் ஆகுமாறு பயோஸ் (BIOS) செட்டப்பில் மாற்றி விடுங்கள். கணினியை மறுபடி இயக்கி விண்டோஸ் எக்ஸ்பீ சிடியை ட்ரைவிலிட Press any key to boot from CD எனும் செய்தி திரையில் தோன்றும். அப்போது ஒரு விசையை அழுத்த சிடியிலிருந்து கணினி பூட் ஆக ஆரம்பிக்கும். இது விண்டோஸை நிறுவும் செயற்பாட்டில் முதற்படியாகும்.
இந்த செயற்பாட்டில் கணினியைப் பரிசோதித்து பைல்கள் லோட் செய்யப்பட்டதும் Licensing Agreement திரை தோன்றும். அப்போது F8 விசையை அழுத்தியதும் வரும் திரையில் புதிதாக விண்டோஸை நிறுவுவதா அல்லது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளதை சரி செய்வதா (Repair) என வினவும். அப்போது கீபோர்டில் R கீயை அழுத்தி ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விண்டோஸை சரி செய்வதற்கான விருப்பை தெரிவு செய்யவும்.
அடுத்து கணினி மறுபடி இயங்க ஆரம்பித்து (restart) ஒரு சில நிமிடங்களில் திரையின் இடது புறத்தில் Installing Devices எனும் செயற்பாடு நடைபெறக் காணலாம். இந்த இடத்தில்தான் நீங்கள் செயற்பட வேண்டியுள்ளது. இங்கு கீபோர்டில் SHIFT + F10 விசைகளை ஒரே நேரத்தில் அழுத்துங்கள். அப்போது திரையில் கமாண்ட் விண்டோ தோன்றும். கமாண்ட் ப்ரொம்டில் NUSRMGR.CPL என டைப் செய்து எண்டர் கீயை அழுத்த கண்ட்ரோல் பேனலிலுள்ள User Accounts விண்டோ திறக்கக் காணலாம். இங்கு நீங்கள் விரும்பும் பயனர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ நீக்கவோ முடியும்.,
ஒரு யூசர் கணக்கில் நுளையும்போது அதாவது லொக்-ஓன் செய்யும் போது பாஸ்வர்டை வினவாமல் செய்ய அதே கமாண்ட் ப்ரொம்டில் control userpasswords2 என டைப் செய்து எண்டர் கீயை அழுத்துங்கள். அப்போது படத்தில் உள்ளது போல் ஒரு டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு அட்மினிஸ்ட்ரேட்டர் கணக்குக்குரிய பாஸ்வர்டை மாற்றவோ அல்லது நீக்கவோ (Reset password) ரீசெட் பாஸ்வர்ட் பட்டனில் க்ளிக் செய்து மாற்றிக் கொள்ளலாம்.
மாற்றங்கல் செய்த பின்னர் அந்த டயலொக் பொக்ஸை மூடிவிட்டு விண்டோஸ் ரிபெயாரிங் செயற்பாடு பூர்த்தியாகும் வரை அதனைத் தொடர 

YouTube வீடியோவில் இருந்து Audio மட்டும் டவுன்லோட் செய்ய


          இணையத்தில் வீடியோக்களை காண பல தளங்கள் இருந்தாலும் யூடியுப் தளம் தான் இதில் சிறந்தது. இதில் பல ஆயிரகணக்கான வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன.  சில சமயங்களில் நாம் ஏதேனும் வீடியோவை பார்க்கும் பொது அந்த வீடியோவில் உள்ள பாடலோ அல்லது வசனமோ நமக்கு மிகவும் பிடித்து இருக்கும். இந்த வீடியோக்களில் இருந்து ஆடியோவை மட்டும் எப்படி டவுன்லோட் செய்வது என்று இங்கு காணலாம். இந்த வேலையை சிறப்பாக செய்ய ஒரு இலவச மென்பொருள் உள்ளது.


இன்ஸ்டால் செய்யும் முறை:
  • முதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை க்ளிக் செய்து இந்த இலவச மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 
  • டவுன்லோட் செய்தவுடன் வரும் செட்டப் பைலை இரண்டு முறை க்ளிக் செய்து மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
  • படத்தில் குறிப்பிட்டதை போல தொடர்ந்து செய்யவும்.
  • மேலே படத்தில் உள்ளதை போல அந்த இரு கட்டத்தில் உள்ள டிக் குறியை நீக்கி விட்டு Next பட்டனை க்ளிக் செய்தால் இந்த மென்பொருள் உங்கள் கணினியில்இன்ஸ்டால் ஆகி விடும். 

பயன்படுத்தும் முறை:
  • இப்பொழுது அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ ஓபன் ஆகும்.
  • அதில் மேலே உள்ள காலி இடத்தில் நீங்கள் ஆடியோ டவுன்லோட் செய்ய விரும்பும் யூடியுப் வீடியோவின் URL கொடுக்கவும்.
  • படத்தில் காட்டியுள்ள இடத்தில் URL கொடுத்து கீழே உள்ள Download பட்டனை க்ளிக் செய்யுங்கள்.
  • அவ்வளவு தான் நீங்கள் கொடுத்த வீடியோவில் இருந்து ஆடியோ மட்டும் தனியே டவுன்லோட் ஆகும். 
  • இந்த பைல் டவுன்லோட் ஆகி முடிந்தவுடன் கீழே இருப்பதை போல செய்தி வரும். 
  • அவ்வளவு தான் உங்களுக்கு தேவையான ஆடியோ பைல் உங்கள் கணினியில் சேமிக்க பட்டிருக்கும்.

WIRELESS PASSWORD தொலைந்து விட்டதா ?



உங்கள் wireless password தொலைந்து விட்டதா ? அல்லது உங்களின் wireless நெட்வொர்க்கின் கடவுச்சொல் உங்களுக்குத் தெரியாதா .கவலை வேண்டாம் இது நம் அனைவருக்கும் ஏற்படும் ஓர் பொதுவான பிரச்னை தான் .இதை தீர்பதர்கென்றே உருவாக்கப்பட்ட மென்பொருள் தான் Wireless Key View available .இதை உங்கள் கணினியில் நிறுவத் (இன்ஸ்டால் செய்ய ) தேவை இல்லை .
இதன் மூலம் தொலைந்து போன உங்கள் கடவுச் சொல்லை எளிதாக கண்டறியலாம் .இங்கே சென்று இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் .

கணினியின் திரையில் தோன்றும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டுமா?

     தங்களின் கணினியின் திரையில் தோன்றும் காட்சிகளை ஓர் அழகிய முழு நில வீடியோவாக பெற்றால் நன்றாக இருக்கும் தானே நண்பர்களே! அதுவும் இலவச மென்பொருள் ஒன்றை பயன்படுத்தி.


இதன் மூலம் இனி தாங்கள் ஏதேனும் தகவல்களை அதாவது தொடர் நிகழ்வு தகவல்களையோ அல்லது U-TUBE போன்ற வீடியோகளை பதிவிறக்க முடியாமல் இருக்கும் நேரத்தில் இந்த மென்பொருளை பயன்படுத்தி எளிமையான முறையில் அவற்றை தங்களின் கணினியில் ரேக்கார்ட் செய்து கொள்ளலாம். மேலும் சிறப்பாக தாங்கள் ஏதேனும் வீடியோ மூலம் சில செய்திகளையோ அல்லது கணினி சார்ந்த பாடங்களையும் இதில் பதிந்துகொள்ளலாம். இதனை பயன்படுத்துவது மிக எளிமை. RECORD என்னும் சிகப்பு கலர் பட்டனை அழுத்துவதன் மூலம் தங்களின் திரை காட்சிகளை படமாக்க படுகின்றன். அந்த செயலை நிறுத்த STOP என்னும் பட்டனை அழுத்துவதன் மூலம் மேற்கொள்ளலாம்.

இந்த மென்பொருளின் பெயர் DEBUT VIDEO CAPTURE. இரண்டு முறையில் இந்த மென்பொருள் கிடைக்கிறது. ஒன்று இலவசம் மற்றொன்று கட்டணம் செலுத்தி பெறுவது. இலவச மென்பொருளில் தாங்கள் தங்களின் ரேக்கார்ட் செய்ய பட்ட வீடியோவை தான் சேவ் செய்ய முடியும். இது ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. பிறகு Any Video Convertor Freeமென்பொருளை கொண்டு, தாங்கள் வேறு வகை வீடியோவாக Convertor  கொள்ளலாம். Any Video Convertor Free பற்றி காண கிளிக் செய்யவும் இங்கு.

இந்த வீடியோவை பதிவிறக்க கீழே கிளிக் செய்யவும்.
Download This Software

Disk Writting

எளிய இனிய வேலையானது பிளாப்பிகளுடன் மல்லுக் கட்டிக் கொண்டிருந்த நாட்களில் பைல்களைப் பதிவு செய்து எடுத்துச் செல்ல ஒரு வரப்பிரசாதமாக வந்த சிடி ரைட்டர்கள் தற்போது எல்லைகளை விரித்து எல்லா வகைகளிலும் கை கொடுக்கும் சாதனமாக மாறிவிட்டன. திறன், வேகம் மற்றும் எளிமை ஆகிய தன்மைகளும் மிக உயர்வாக இவற்றில் அமைந்து விட்டன. போகிற போக்கில் கையாண்டு நமக்குத் தேவையானவற்றை வடிவமைத்துப் பெறுவதில் இந்த சிடி மற்றும் டிவிடி ரைட்டர்கள் பெரிய அளவில் கை கொடுக்கின்றன. அவற்றின் செயல்பாடுகள் குறித்து காணலாம்.



புதிய டிவிடி ரைட்டர்கள் பலவகையான டிஸ்க்குகளை வடிவமைக்கும் திறன் கொண்டிருக்கின்றன. எடுத்துக் காட்டாக உங்கள் பழைய வீடியோ டேப்களில் இருக்கும் படங்களை சிடி மற்றும் டிவிடிக்களில் அமைக்கலாம். நீங்களே எடுக்கும் வீட்டு நிகழ்ச்சிகளை எடிட் செய்து வீடியோ டிவிடிக்களைத் தயாரிக்கலாம்.



டிவிடி ரைட்டர் என்றாலும் ஆடியோ சிடிக்களை உருவாக்கவும் செய்திடலாம். ஆடியோ வீடியொ என்றில்லாமல் எந்த டிஜிட்டல் பைல்களையும் பாதுகாப்பாக பதிந்து வைத்திடும் மீடியமாக இன்று டிஸ்க்குகள் பயன்படுகின்றன.


ஒரு சிடி அல்லது டிவிடியில் உங்கள் கற்பனைக்கேற்ற ஆடியோ அல்லது வீடியோ பைல்களைப் பதிந்து வைத்திட முதலில் காலியான புதிய சிடி, டிவிடி வேண்டும். இதனை வாங்கப் போனால் எத்தனையோ வகைகளைக் காட்டி கடைக்காரர் உங்களைக் குழப்பலாம். அவற்றின் வகைகளை இங்கு பார்ப்போம்.


சிடியைப் பொறுத்தவரை இரண்டு வகையில் பதிவு செய்யக் கூடிய சிடிக்கள் உள்ளன. ஏறத்தாழ 700 எம்பி அளவில் டேட்டாக்களை இதில் பதியலாம். நல்ல வண்ணத்தில் அமைந்த 450 போட்டோக்கள் அல்லது 150 எம்பி3 பாடல்களை இதில் பதியலாம். சிடி–ஆர் (CDR)எனப்படும் சிடியில் ‘R’என்பது ரெகார்டபிள் அதாவது பதிவு செய்யக் கூடியது என்பதைக் குறிக்கிறது. காலியாக இவற்றை வாங்கி இதில் ஒருமுறை பதியலாம். பதிவு செய்த இடத்தில் மீண்டும் பதிய இயலாது. CDRW டிஸ்க்குகளில் RW Rewritable என்பது மீண்டும் மீண்டும் அழித்து டேட்டாவை எழுதலாம் என்பதைக் குறிக்கிறது.


டிவிடிக்களைப் பொறுத்தவரை அவற்றின் வகைகள் இன்னும் அதிகமாகும். டிவிடி ஒன்றில் பொதுவாக 4.7 கிகாபைட் அளவிலான தகவல்களைப் பதியலாம். இதிலும் அடிப்படையில் டிவிடி–ஆர் மற்றும் டிவிடி – ஆர்.டபிள்யூ என்ற இரு வகைகள் உள்ளன. 2000 நல்ல வண்ண புகைப்படங்களை ஒரு டிவிடியில் பதியலாம்.


டிவிடியைப் பொறுத்தவரை அதில் + மற்றும் – அடையாளங்கள் அவற்றை வேறுபடுத்துகின்றன. இதனை ப்ளஸ் பார்மட் மற்றும் மைனஸ் பார்மட் என்றும் அழைக்கின்றனர். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள ரைட்டர் எந்த வகை பார்மட் டிவிடியில் எழுதும் திறன் கொண்டவை என்று பார்த்து அதற்கான டிவிடியை வாங்க வேண்டும். பெரும்பான்மையான கம்ப்யூட்டரில் உள்ள டிவிடி ரைட்டர்கள் இந்த இரண்டு வகை பார்மட்களிலும் எழுதக் கூடியதாகத்தான் உள்ளன. இருந்தாலும் அதன் முகப்பு கதவில் இந்த அடையாளம் இருக்கும். அதனைப் பார்த்து அறிந்து கொள்வது நல்லது.


அண்மையில் இந்த டிவிடியில் புதிய வகை ஒன்று சந்தைக்கு வந்து கூடுதலாக சிறிது குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது. அது டிவிடி டபுள் லேயர் (DVD Double Layer) டிஸ்க் என அழைக்கப்படுகிறது.


இந்த வகை டிஸ்க்குகளில் 8.5 கிகா பைட் அளவுகளில் தகவல்களைப் பதியலாம். தற்போது கடைகளில் டபுள் லேயர் ஆர்.டபிள்யூ வகை டிவிடிக்கள் கிடைக்கின்றன. டபுள் லேயர் டிஸ்க்குகளை DL என எழுதிக் குறிப்பிடுகின்றனர். உங்களிடம் டபுள் லேயர் டிஸ்க் ரைட்டர் இல்லாமல் இருந்து நீங்கள் அப்படி ஒன்றை விரும்பினால் கூடுதல் டிவிடி டபுள் லேயர் ரைட்டர் ஒன்றை வாங்கிப் பயன்படுத்தலாம். யு.எஸ்.பி. டிரைவில் இயங்கும் வகையில் இவை அமைக் கப்பட்டு கிடைக்கின்றன. இதன் விலை ரூ. 4,500க்குள் தான் இருக்கிறது.



சிடிக்களை உருவாக்கலாமா?





சிடிக்களில் தகவல்களை எழுத தனியே சாப்ட்வேர் புரோகிராம் வேண்டும் எனப் பலர் எண்ணுகின்றனர். அது தவறு. மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த வசதி தரப்பட்டுள்ளது. சுருக்கமாக அந்த வழியைக் காண்போம்.


My Computer சென்று கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் சிடி/டிவிடி ட்ரைவிற்கான ஐகானில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Properties கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் Recording டேபில் கிளிக் செய்திடவும்.



அதற்கு முன் மேலாக உள்ள ஆப்ஷன் Enable CD Recording on this drive என்பது டிக் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் முக்கியமானது சிடி/டிவிடிக்களில் டேட்டா எழுதப்படும் வேகம். பொதுவாக எல்லாரும் ‘Fastest’ என்ற பிரிவைத் தேர்ந்தெடுப்பார்கள். இருப்பினும் குறைந்த வேகத்தையும் சில வேளைகளில் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும்.



பழைய வகை கம்ப்யூட்டர்கள், குறைவான வேகத்தில் இயங்கும் ரைட்டர்கள், டிஸ்க்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்துகையில் சற்று குறைவான வேகம் அமைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் டேட்டா எழுதி முடித்தவுடன் உங்கள் சிடி ரைட்டரின் கதவு திறக்கப்பட்டு சிடி வெளியே நீட்டப்பட வேண்டுமா என்பதுதான். இது உங்கள் பிரியத்தைப் பொறுத்தது. எழுதிய பைல்கள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டுமானால் இந்த ஆப்ஷனை ஒதுக்கிவிடலாம். எழுதியபின் டிஸ்க் டிரைவில் கிளிக் செய்து என்ன எழுதப்பட்டுள்ளது என்பதனைப் பார்க்க இது உதவிடும். சிடி–ஆர் டிஸ்க் என்றால் அப்படியே போட்டு டேட்டா பைல்களை எழுதத் தொடங்கி விடலாம். சிடி – ஆர் டபிள்யூ டிஸ்க் ஒன்றை முழுமையாகப் பயன்படுத்த எண்ணினால் அதில் உள்ள பைல்களை அழிக்க வேண்டும். சிடி ரைட்டிங் டாஸ்க் பேனில் இதற்கான ஆப்ஷனை இயக்கிஅழித்துவிடலாம். இப்போது சிடியில் பைல்களை எழுத இரண்டு விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோக்களை திறக்கவும். ஒன்று எழுதப்பட வேண்டிய பைல்களுக்கானது; இன்னொன்று எழுதப்பட வேண்டிய சிடிகளுக்கானது. எந்த எந்த பைல்கள் எழுதப்பட வேண்டுமோ அவற்றை இழுத்துவந்து சிடி டிரைவ் போல்டரில் போடவும். இவை காப்பி செய்யப்பட்டுவிட்டது போல் தோன்றினாலும் சிடியில் காப்பி செய்யப்படவில்லை. ஹார்ட் டிஸ்க்கில் இதற்கென ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட போல்டரில் காப்பி செய்யப்படும். இது நீங்கள் பைல்களை எழுதுவதற்கான பர்னிங் கட்டளை கொடுப்பதற்காகக் காத்திருக்கும். பைல்களை காப்பி செய்தவுடன் மை கம்ப்யூட்டரில் சிடி டிரைவைத் திறந்து இடது புறமாக உள்ள பிரிவில் Write these files to the CD என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். சிடிக்கு ஒரு பெயர் கொடுத்து Next என்பதில் கிளிக் செய்க. பைல்கள் தயார் செய்யப்பட்டு எழுதப்படும். எழுதி முடிந்தவுடன் நீங்கள் செட் செய்ததற்கேற்ப சிடி ட்ரே வெளியே வரும்; அல்லது அப்படியே நீங்களாக அதனை எடுக்கும் வரை இருக்கும்.

_________________


டிவிடி ரைட்டிங்:



அதிக அளவில் டேட்டாவினை ஒரு டிஸ்க்கில் அமைக்க டிவிடி தேவைப்படுகிறது. விண்டோஸ் விஸ்டா ஆப்பரேட்டிங் சிஸ்டம் வைத்திருப்பவர்கள் தான் மேலே சிடிக்களுக்குத் தந்தபடி எளிதாக டிவிடிக்களில் எழுத முடியும். விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் டிவிடிக்களை எழுத வசதி தரப்படவில்லை. எனவெ கூடுதல் சாப்ட்வேர் தேவையாய் உள்ளது. இவற்றில் ராக்ஸியோ (www.roxio.com) மற்றும் நீரோ (www.nero.com) புகழ் பெற்றவை. உங்களின் டிவிடி ரைட்டருடன் பெரும்பாலும் நீரோ சாப்ட்வேர் தரப்படுகிறது.
டிவிடி ரைட்டரைப் பொருத்துகையில் இந்த சாப்ட்வேர் தொகுப்பும் பதியப்பட்டிருக்கும். இவற்றைப் பயன்படுத்தி சிடியைப் பதியும் அதே வழிகளில் டிவிடிக்கேற்ற ஆப்ஷன்களைத் தேர்ந்தெடுத் துப் பதியலாம். இவை இல்லாதவர்கள் கவலைப் பட வேண்டியதில்லை. இன்னொரு எளிய, கையாள மிகவும் இலகுவான ஒரு புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் பைனல் பர்னர் (ஊடிணச்டூ ஆதணூணஞுணூ) என்பதாகும். இந்த இலவச புரோகிராமினை www.tinyurl.com/22nvab என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து பெறலாம். இதனை டவுண் லோட் செய்து கம்ப்யூட்டரில் பதிப்பது எளிது.


சிடி/டிவிடியில் பதிவதற்கான இன்டர்பேஸ் தொகுப் பும் மிக அருமையாக படிப்படியாகத் தரப்பட்டுள்ளது. டிவிடியில் தகவல் பைல்கள் என்றாலும் ஆடியோ அல்லது வீடியோ பைல்கள் என்றாலும் அதற்கான ஆப்ஷன்கள் அனைத்து பர்னிங் புரோகிராம்களிலும் வரிசையாகத் தரப்பட்டுள்ளன. ஓரிரு முறை இதனைப் பயன்படுத்தினால் பின்னர் வேகமாக இவற்றைக் கையாளமுடியும். அந்த அளவிற்குஇந்த புரோகிராம்கள் எளிமைப் படுத்தப்பட்டுள்ளன. ரைட்டர்களின் விலையும் குறைந்துள்ளன. எனவே இவற்றை வாங்கி பயன்படுத்துங்கள்.

டிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்றுங்கள்

கம்ப்யூட்டரில் சில விண்டோக்களில் உள்ள டெக்ஸ்ட்டைப் படித்துப் பார்க்கையில் கண்களை இறுக்கிக் கொண்டு படிக்கிறீர்களா? ஏன் இந்த சிரமம்? மானிட்டரில் தெரியும் கம்ப்யூட்டர் விண்டோக்களை நம் வசதிக்கேற்றபடி அமைக்கலாமே! டெக்ஸ்ட் அளவு மட்டுமின்றி வண்ணக் கலவைகளையும் கண்களை உறுத்தாத படி அமைக்கலாம். டெஸ்க்டாப்பில் தெரியும் படம், வீடியோ காட்சிகள் மற்றும் விளையாடும் போது தோற்றங்கள் ஆகியவற்றை நமக்கு ஏற்றபடி மாற்றலாம்.

இதைத்தான் டிஸ்பிளே செட்டிங்ஸ் (display settings) என அழைக்கிறார்கள். இது குறித்து இங்கே காணலாம். டிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்றி அமைப்பதற்கான விண்டோவினை டெஸ்க்டாப்பில் ஏதாவது ஒரு காலியான இடத்தில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties தேர்ந்தெடுத்து பெறலாம். இதனையே கண்ட்ரோல் பேனல் (Control Panel) சென்று அங்கு Appearance and Themes பிரிவில் display கிளிக் செய்து பெறலாம்.

இவ்வாறு செல்கையில் Display Properties என்னும் விண்டோ கிடைக்கும். இதில் செட்டிங்ஸ் அமைக்க Themes, Desktop, Screen Saver, Appearance மற்றும் Settings என்னும் ஐந்து பிரிவுகள் தரப்பட்டிருக்கும். இதில் எந்த பிரிவில் மாற்றங்களை ஏற்படுத்தினாலும் Apply அல்லது OK என ஏதாவது ஒன்றில் அல்லது இரண்டிலும் கிளிக் செய்து வெளியேற வேண்டும்.

தீம்ஸ் (Themes) : தீம் என்பது ஸ்கிரீன் பின்னணி. அத்துடன் சவுண்ட் அரேன்ஞ்மென்ட் மற்றும் ஐகான் அமைப்பு ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். இந்த பிரிவில் உங்களுடைய கம்ப்யூட்டரில் தோன்றும் அனைத்து விண்டோவிற்கான வண்ணங்கள், ஐகான்கள் மற்றும் ஒலி வகை ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

டெஸ்க்டாப் (Desktop) : இந்த பிரிவினைத் தேர்ந்தெடுத்து டெஸ்க்டாப்பிற்கான பேக்ரவுண்ட் எனப்படும் பின்னணியில் தெரியும் படத்தை அமைக்கலாம். அந்த விண்டோவில் கொடுத்துள்ள படங்களிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

அல்லது ஆன்லைனில் சென்று ஏதேனும் படம் ஒன்றை எடுத்து அமைக்கலாம். கம்ப்யூட்டரில் உள்ள படங்களையும் பேக்ரவுண்ட் படமாக அமைக்கலாம். அது உங்கள் போட்டோவாகவோ அல்லது கார்ட்டூன் கேலிச் சித்திரமாகவோ இருக்கலாம். இந்த விண்டோ மட்டுமின்றி இத்தகைய பட பைல்கள் அல்லது இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்கையில் உங்கள் மனதைக் கவரும் படங்கள் ஆகியவற்றில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் என்பதில் Set as Desktop Background கிளிக் செய்தும் பேக்ரவுண்டை அமைக்கலாம்.

Desktop Items என்ற விண்டோவினைப் பெற இங்கு Customize Desktop என்பதில் கிளிக் செய்திடவும். இதில் General மற்றும் Web என இரண்டு பிரிவுகள் கிடைக்கும். இதில் General பிரிவில் எந்த ஷார்ட் கட் ஐகான்கள் டெஸ்க்டாப்பில் காட்டப்பட வேண்டும் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம். அல்லது Desktop cleanup என்னும் வசதியைப் பயன்படுத்தி அடிக்கடி பயன்படுத்தாத ஷார்ட்கட் ஐகான்களை எடுத்துவிடலாம்.

இந்த ஷார்ட் கட் ஐகான்களை எடுப்பதனால் அவை இயக்கிக் கொண்டு வரும் புரோகிராம்களுக்கு எந்த பாதிப்பு வராது. புரோகிராம்களுக்கான குறுக்கு வழிகளை எடுக்கிறோம், அவ்வளவுதான். அடுத்ததாக Screen Saver என்னும் பிரிவு. இந்த பிரிவில் ஸ்கிரீன் சேவராக எந்த காட்சி வர வேண்டும் என்பதனை நீங்கள் முடிவு செய்திடலாம். அல்லது நீங்களே ஒரு காட்சியை உருவாக்கி பயன்படுத்தலாம்.

நீங்கள் கம்ப்யூட்டரில் எந்த வேலையையும் குறிப்பிட்ட காலத்தில் (நிமிடங்கள்) இயக்காமல் இருந்தால் ஸ்கிரீன் சேவர் இயக்கப்பட்டு காட்சி அளிக்கும். இணையத்தில் அழகான பல ஸ்கிரீன் சேவர்கள் கிடைக்கின்றன.

ஆனால் இவை நம்பகமான தளங்களில் உள்ளனவா என்று பார்த்து இறக்கிப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இப்படிப்பட்ட அழகான ஸ்கிரீன் சேவர்களுடன் வைரஸ் அல்லது உங்கள் பெர்சனல் தகவல்களைத் திருடும் பிஷிங் புரோகிராம்களும் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்கிவிடும். விண்டோஸ் புரோகிராமிலேயே உள்ள ஸ்கிரீன் சேவர்களைப் பயன்படுத்துவதே நல்லது. பட்டியலில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்தால் அது எப்படி தோற்றமளிக்கும் என முன்காட்சியாகக் காட்டப்படும்.

அதனைப் பார்த்து உங்களுக்குப் பிடித்தால் அதனையே தேர்ந்தெடுத்து அமைக்கலாம். ஸ்கிரீன் சேவரே தேவையில்லை என்றாலும் அதற்கான பிரிவைத் தேர்ந்தெடுத்து அமைத்து வெளியேறலாம். இதே விண்டோவில் Power settings என்ற பிரிவில் நீங்கள் கம்ப்யூட்டரை குறிப்பிட்ட நேரம் பயன்படுத்தாமல் இருந்தால் மானிட்டருக்கு வரும் மின் சப்ளையை நிறுத்தவும் பின் நீங்கள் இயங்கத் தொடங்கியவுடன் இயக்கவும் செட் செய்திடலாம்.

அப்பியரன்ஸ் (Appearance) : இந்த பிரிவுதான் உங்கள் டெஸ்க்டாப்பின் மிடுக்கான தோற்றத்தினை செட் செய்திடும் பிரிவாகும். இதில் விண்டோவின் ஸ்டைல் மற்றும் கலரை செட் செய்திடலாம். விண்டோவில் காட்டப்படும் பட்டன்கள் மற்றும் எழுத்துக்களின் அளவினை செட் செய்திடலாம். இந்த பிரிவில் கிடைக்கும் கீழாகச் செல்லும் அம்புக் குறியினை அழுத்தி பல்வேறு செட்டிங்குகளைப் பார்க்கலாம்.

அதில் எது உங்களுக்கு விருப்பமாக உள்ளதோ அதனைத் தேர்ந்தெடுத்தால் அது எப்படி தோற்றமளிக்கும் என்பது அருகில் கட்டத்தில் காட்டப்படும். அது பிடித்துப் போனால் அதனைத் தேர்ந்தெடுத்து செட் செய்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். எழுத்தின் அளவு (Font size) என்பது பலருக்கும் பயன்படும் ஒரு வசதி. விண்டோவில் காட்டப்படும் எழுத்தின் அளவு சிறியதாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் இன்னும் சற்று பெரியதாக இருக்க வேண்டும் என எண்ணினால் இதனை மாற்றி செட் செய்திடலாம். இன்னும் கூடுதலாக இரண்டு வகைகள் உண்டு.

அவை: Large Fonts மற்றும் Extra Large Fonts. இன்னும் பல மாற்றங்களை இதில் மேற்கொள்ளலாம். Advanced என்ற பிரிவைத் தேர்ந்தெடுத்து விண்டோ, அதன் பார்டர், ஐகான் அளவு மற்றும் மெனுக்கள் எப்படித் தோன்ற வேண்டும் என்பதனை செட் செய்திடலாம்.

செட்டிங்ஸ் (Settings) : இந்த டேப் தரும் பிரிவில் ஸ்க்ரீன் ரெசல்யூசன் மற்றும் கலரின் தன்மையை செட் செய்திடலாம். ரெசல்யூசன் என்பது திரையில் எத்தனை பிக்ஸெல்களில் வண்ணம் தரப்பட வேண்டும் என்பதாகும். எந்த அளவிற்கு அதிகமாக ரெசல்யூசனில் இதனை செட் செய்கிறோமோ அந்த அளவிற்கு திரையின் தோற்றம் தெளிவாகக் கிடைக்கும். கூடுதலான ரெசல்யூசன் உங்களுக்கு அதிக அளவில் திரை இடத்தைக் கொடுக்கும். ஆனால் இதனால் டெக்ஸ்ட் மற்றும் ஐகான் மிகச் சிறியதாக இருக்கலாம். எனவே எழுத்துவகையினைப் பெரிதாக்கி ஐகான்களையும் பெரியதாக அமைக்கலாம்.

உங்களுடைய மானிட்டரில் எந்த அளவிற்கு ரெசல்யூசனை கூடுதலாக வைக்க முடியுமோ அந்த அளவிற்கு மட்டுமே வைக்க முடியும். பல ரெசல்யூசன்களில் வைத்து சோதனை செய்து பார்த்து எது உங்களுக்கு நிறைவாக இருக்கிறதோ அந்த அளவில் வைத்துக் கொள்ளலாம். Color quality ஆப்ஷன் எப்போதும் Highest (32 bit) என்ற அளவில் வைக்கப்பட வேண்டும். உங்களுக்கு டிஸ்பிளே பிரச்னைகள் இருந்தால் Troubleshoot என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். அங்கு தீர்வுகள் கிடைக்கும். இதே விண்டோவில் இருக்கும் Advanced பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது General, Adapter, Monitor, Troubleshoot, Color Management என்ற டேப்களுடன் விண்டோ ஒன்று காட்டப்படும்.

General: கூடுதலான ரெசல்யூசனில் திரைக் காட்சி அளவை செட் செய்திருந்தால் இங்கு உள்ள DPI (dots per inch) செட்டிங்ஸ் மூலம் டெக்ஸ்ட் உட்பட அனைத்து ஸ்கிரீன் சமாச்சாரங்களையும் பெரிதாகக் காட்டலாம்.

Adapter: இந்த பிரிவு உங்களுடைய கம்ப்யூட்டரில் இணைக்கப் பட்டிருக்கும் கிராபிக்ஸ் கார்டு குறித்த தகவல்களைக் கொடுக்கும். இதில் உள்ள Properties என்ற பிரிவில் கிளிக் செய்தால் அப்போது பயன்பட்டுக் கொண்டிருக்கும் டிரைவர் சாப்ட்வேர்கள் அனைத்தும் குறித்த தகவல்கள் கிடைக்கும்.

Monitor: மானிட்டர் திரை தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் ரெப்ரெஷ் ரேட்டை இங்கு அதிகப்படுத்தலாம். குறைவான ரெப்ரெஷ் ரேட் இருந்தால் அதனால் கண்களுக்குக் கெடுதல் வருமாதலால் இந்த புதுப்பிக்கும் ரேட்டினை அதிகமாக வைத்தல் நல்லதுதான். இந்த திரையில் Hide modes that this monitor cannot display என்று இருப்பதனை டிக் செய்திட வேண்டும். அதன் பின் ஆரோ அழுத்தி மெனுவினை விரித்து அதிக பட்ச ரெப்ரெஷ் ரேட்டினை அமைக்கவும். எல்.சி.டி. திரைகளுக்கு இந்த பிரச்னை இல்லை.

Troubleshoot: இதில் உள்ள Hardware acceleration slider ஐப் பயன்படுத்தி கிராபிக்ஸ் கார்ட் செயல்பாட்டை மாற்றலாம்.

Color Management: டிசைனர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் பலவகையான கலர் திட்டங்களை அமைக்க இந்த பிரிவு உதவுகிறது. கடைசியாக உள்ள டேப் உங்களுடைய கம்ப்யூட்டரில் உள்ள கிராபிக்ஸ் கார்டிற்கான செட்டிங்ஸ் அமைப்புகளை அமைக்க உதவுகிறது. இதனை ட்யூன் செய்வதற்கான வழிகளை அந்த கிராபிக்ஸ் கார்ட் தயாரித்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பெற வேண்டும். அவ்வப்போது அந்நிறுவனம் இந்த கார்டுக்கென வழங்கும் மேம்படுத்தப்பட்ட டிரைவர் புரோகிராம்களை டவுண்லோட் செய்து சிஸ்டம் பைல்களுடன் சேர்க்க வேண்டும்.

விண்டோஸ் 7 Tips and Tricks



விண்டோஸ் 7 பயன்பாடு தொடர்ந்து பன்னாட்டளவில் அதிகரித்து வருகிறது. இதனைப் பயன்படுத்துவதன் மூலம், இந்த சிஸ்டம் தன்னிடத்தே கொண்டிருக் கின்ற பல வசதிகள் பயனாளர்களுக்குத் தெரிய வருகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.


1. பைல்கள் இடையே எளிதாக:

ஏதேனும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றில், ஒன்றுக்கு மேற்பட்ட பல பைல்களை, ஒரே நேரத்தில் உருவாக்கிச் செயல்படும் சூழ்நிலை உருவாகலாம்.

எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில், பல டாகுமெண்ட்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து கையாளலாம். இந்த நேரத்தில், இந்த பைல்கள் திறக்கப்பட்டுள்ள விண்டோக்கள் இடையே சென்று வர, விண்டோஸ் 7 எளிய வழியைத் தருகிறது.

டாஸ்க்பாரில் உள்ள பைல்களின் ஐகான்களில் கிளிக் செய்கையில், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டால், ஒவ்வொருமுறை கிளிக் செய்கையிலும், அடுத்தடுத்த விண்டோ செயல்பாட்டிற்கு கிடைக்கும்.


2.விண்டோக்களைக் கையாளுதல்:

விண்டோஸ் 7, டாகுமெண்ட் மற்றும் புரோகிராம்களைக் கையாள புதிய வசதிகளைக் கொண்டுள்ளது. விண்டோ ஒன்றினைக் குறிப்பிட்ட இடத்தில் கொண்டு போய் நிறுத்தலாம். இதனை ”docking” என விண்டோஸ் 7 கூறுகிறது. செயல்படும் விண்டோவினை ஏதேனும் ஒரு பக்கமாக, பாதி திரையில் வைத்திட, அதனை இடது அல்லது வலது பக்கமாக, மவுஸ் கொண்டு இழுத்தால் போதும்.

விண்டோ தானாக, தன் அளவை பாதி திரைக்கு மாற்றிக் கொள்ளும். அதே போல, மேலாக இழுத்தால், விண்டோ பெரிதாகும். கீழாக இழுத்தால், சிறிய அளவில் மாறும். பாதி திரையில் வைத்தபடி, நெட்டு வாக்கில் இந்த விண்டோவினை அமைக்கலாம். பாதி திரை அளவில் இருந்தவாறே, நெட்டு வாக்கில் விரியும், குறையும்.

இந்த செயல் பாடுகளை கீகள் மூலமும் இயக்கலாம். விண்டோஸ் கீயுடன் இடது அம்புக் குறி அல்லது வலது அம்புக் குறியைப் பயன்படுத்தினால், விண்டோ திரையின் பாதி அளவில் சென்று தன்னை நிலைப்படுத்திக் கொள்ளும். இதே போல, விண்டோ கீயுடன் மேல் மற்றும் கீழ் அம்புக் குறியினைப் பயன்படுத்தினால், விண்டோ சுருங்கும், விரியும். விண்டோ + ஷிப்ட்+ மேல் அம்புக் குறி கீகளை அழுத்தினால், அல்லது கீழ் அம்புக் குறி கீயை அழுத்தினால், நெட்டு வாக்கில் திரை பாதியாகும் மற்றும் விரியும்.


3. பல மானிட்டர் செயல்பாடு:

ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை ஒரு கம்ப்யூட்டருடன் இணைத்துச் செயல்படுத்த, விண்டோஸ் 7 எளிதான வழியைத் தருகிறது. இவற்றை இணைத்த பின்னர், விண்டோ+ஷிப்ட்+இடது அம்புக்குறி கீ / வலது அம்புக் குறி கீ களை அழுத்த, செயல்பாடு ஒவ்வொரு மானிட்டராக மாறிச் செல்லும்.


4.உங்கள் டெஸ்க்டாப்பை உடன் அணுக:

விண்டோஸ் 7 தொகுப்பில் தரப்பட்டுள்ள, மிகத் திறன் கொண்ட ஒரு டூல்,டெஸ்க்டாப் கிடைக்க கொடுக்கப் பட்டுள்ள பட்டன் தான். டாஸ்க்பாரின் வலது மூலையில் கடிகாரத்திற்கு அருகே உள்ள சிறிய செவ்வகக் கட்டத்தில் கிளிக் செய்தால், உடனே டெஸ்க்டாப் திரை காட்டப்படும். இதனையே விண்டோ கீ + ஸ்பேஸ் கீ அழுத்தியும் பெறலாம்.


5. சிக்கல் இல்லாத விண்டோ செயல்பாடு:

நம் வாழ்க்கையில் எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட செயல்பாடுகளில் மூழ்கிச் சிக்கலில் சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் தொகுப்பின் செயல்பாட்டிலும், இதே போல பல புரோகிராம் விண்டோக்களைத் திறந்து வைத்து சிக்கிக் கொள்வோம். விண்டோஸ் 7 சிஸ்டம், நீங்கள் இயக்கும் விண்டோ தவிர மற்ற அனைத்தையும் பின்னுக்குத் தள்ளுகிறது.

விண்டோ + ஹோம் கீகளை அழுத்த, அனைத்து செயல்படாத விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும். அதாவது நீங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைல் உள்ள விண்டோ மட்டுமே திரையில் இருக்கும். மற்ற அனைத்தும் மினிமைஸ் செய்யப்படும். மீண்டும் அவை அனைத்தும் வேண்டும் என்றால், மீண்டும் விண்டோ கீ + ஹோம் கீ களை அழுத்தினால் போதும்.


6.ஹெல்ப் டெஸ்க்கிற்கு உதவி:

என்னதான் ஹெல்ப் டெஸ்க் உதவி சிஸ்டத்தில் இருந்தாலும், பிரச்னை என்னவென்று நாம் தெளிவாகத் தெரிவித்தால் தான், சிக்கலுக்கான தீர்வினை ஹெல்ப் டெஸ்க் நமக்குத் தர முடியும். சிக்கலின் பின்னணியைக் கம்ப்யூட்டரே பதிந்து தரும் வகையில், விண்டோஸ் 7 “Problem Steps Recorder” என்று ஒரு டூலைத் தந்துள்ளது.

இது ஒரு ஸ்கிரீன் கேப்சர் டூல். இதன் மூலம் பிரச்னை ஏற்பட்ட நிலைகள் ஒவ்வொரு திரைக் காட்சியாகப் பதியப்படுகிறது. இது ஒரு எச்.டி.எம்.எல். பைலாக உருவாக்கப்பட்டு, பின்னர் ஸிப் பைலாக பார்மட் செய்யப்பட்டு, ஹெல்ப் டெஸ்க்கிற்கு அனுப்பப்படுகிறது.

இந்த பதிந்திடும் புரோகிராம் கண்ட்ரோல் பேனலில் கிடைக்கிறது. “Record steps to reproduce a problem” என்ற பிரிவில் இது உள்ளது. அல்லது psr.exe என்ற பைலை இயக்கினால் போதும்.


7.டாஸ்க் பாரில் போல்டர்கள்:

வழக்கமாக, நாம், ஒரு குறிப்பிட்ட போல்டரில் அடிக்கடி பயன்படுத்தும் பைல்களை வைத்திருப்போம். கம்ப்யூட்டரை இயக்கியவுடன், இந்த போல்டருக்குத்தான் அடிக்கடி சென்று, திறந்து அதில் உள்ள பைல்களை டபுள் கிளிக் செய்து இயக்குவோம். இவ்வாறு அடிக்கடி திறக்கும் போல்டர்களை, உங்கள் விரல் நுனியில் வைத்துக் கொள்ள, விண்டோஸ் 7 உதவுகிறது.

அடிக்கடி பயன்படுத்தும் போல்டரின் மீது ரைட் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டாஸ்க்பாரில் போட்டு வைக்கலாம். அங்கே போல்டர் ஐகானாக அது அமர்ந்துவிடும். பின்னர், அதில் கிளிக் செய்து, மிக எளிதாக பைல்களைப் பெறலாம். குயிக் லாஞ்ச் புரோகிராம் போல, இது குயிக் லாஞ்ச் போல்டராகச் செயல்படுகிறது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India