Sunday, December 25, 2011

உங்கள் கணனியில் Task Manager Open ஆகவில்லையா?


           Task Manager ஆனது Inbuit  நிகழ்ச்சி நிரலாகWindows  வழங்கியுள்ள சிறப்பான ஓர் வசதியாகும். இதனை பொதுவாக நம் கணனியில் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கும் (Run) விடயங்களை அறிய,சில Task அல்லது Program களை இலகுவாக Startசெய்யவும் End செய்யவும்  பயன்படுத்துகின்றோம். மேலும் இதன் மூலம் RAM, CPU usage மற்றும்  Performanceபோன்றவற்றை அறியலாம்.  சில கணனிகளில் திறக்க மறுக்கும். இது Virus மற்றும் Trojanதாக்குதல்களினால் Disable செய்யப்பட்டு படத்தில் காட்டப்பட்டுள்ளவாறான Error Message வரக்கூடும்.

 
இதனை சரிசெய்ய பல முறைகள் காணப்படுகின்றன. அதிகமானோர் இதனை அறிந்திருந்தாலும் அறிந்திறாதோருக்காக இப்பதிவை பகிர்கின்றேன். அவற்றில் சிலவற்றை இங்கு நோக்குவோம்.

01. முறை
  • Start கிளிக் செய்து Run செல்லுங்கள் (Win + R).
  • அதில் gpedit.msc என Type செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.
  • பின் Group Policy Editor இல்
User Configuration  சென்று Administrative Template என்பதில்  System தெரிவு செய்துCtrl + Alt + Del Optionஎன்பதை  Click செய்யுங்கள்.

அங்கு Remove Task Manager என்பதை Double Click செய்து
அதில் Not Configured என்பதை தெரிவு செய்து OK பொத்தானை அழுத்துங்கள்.

02. முறை
  • Start கிளிக் செய்து Run செல்லுங்கள் (Win + R).
  • அதில் regedit என Type செய்து OK பொத்தானை அழுத்துங்கள். பின் அதில்

HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System


அதன் வலப்பக்கத்தில் காட்டப்பட்டுள்ள DisableTaskMgr என்பதில் Right Clickசெய்து Delete செய்யுங்கள் பின் அதனை Confirm செய்து விடுங்கள்.
 
03. முறை
Task Manager Fix ஐ தரவிறக்கம் செய்து Run ( Double Click) செய்யுங்கள்

நீங்களும் Task Manager யை மீளப்பெற்றுக் கொள்ளலாம்.

புதிய கிரகம் கண்டுபிடிப்பு!


பூமியைப் போன்றே உயிர்கள் வாழக் கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
பூமிக்கு 600 ஒளி வருட தொலைவில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் -22B என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு ஒளி வருடம் என்பது சுமார் 10 ட்ரில்லியன்  கிலோமீட்டர் தூரத்திற்குச் சமமானது.
தண்ணீர் உட்பட உயிரினங்கள் வாழத் தேவையான சூழ்நிலை இந்தக் கிரகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிரகம் சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பூமி உள்ள சூரிய மண்டலம் தவிர விண்வெளியில் உயிரினங்கள் வசிக்கக் கூடிய கிரகம் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கெப்ளர் தொலைநோக்கி மூலம் விண்வெளியை ஆராயத் தொடங்கியது.        இந்தத் தொலைநோக்கி மூலமே தற்போது இந்தப் புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறந்த LCD/TFT Monitor வாங்குவது எப்படி?

LCD / TFT திரை வாங்கும் போது சில விசயங்களை மனதில் கொள்ளவேண்டும்.
1. அளவு
தங்களின் தேவை மற்றும் சந்தை விலையைப் பொறுத்து அளவு மாறுபடும்.

15 – இன்ச்
16 – இன்ச் (சில மாடல்களில் மட்டும்)
17 – இன்ச்
20 – இன்ச்
22 – இன்ச்
ஆகியவை சராசரியான அளவுகள்.

2. விலை:
அளவு கூடக் கூட விலை 2000 முதல் 4000 வரை கூடும்.
22இன்ச் திரை சராசரியாக 10000 ரூபாய் முதல் 11000 ரூபாய் வரை கிடைக்கும்.

ரூபாய் 6500 – 7000ல் ஒரு நல்ல 17 இன்ச் திரையை வாங்கிவிடலாம்.

3. எந்தத் தயாரிப்பு நல்லது?

SAMSUNG :
திரை தயாரிப்பில் மிகவும் அனுபவம் மற்றும் மக்களின் நம்பிக்கை பெரிதும் உள்ள இந்த நிறுவனத்தின் திரைகள் சிறப்பாக உள்ளன.

DELL:
அருமையான தரத்தின் அடையாளமாக விளங்கும் இந்த நிறுவனம், மிகச் சிறந்த திரைகளை வெளியிடுகிறது. மக்களின் மிக இன்றியமையாத் தேவையான விற்பனைக்குப் பிந்திய சேவை வழங்குவதில் இந்நிறுவனம் சற்றே பின்தங்கி உள்ளது.

LG, Viewsonic & Acer போன்ற நிறுவனங்கள் நல்ல தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி இருந்தாலும், விற்ப்பனை செய்வொரின் ஆதரவு குறைவாகவே உள்ளது.

டெக்தமிழ் பரிந்துரை:
சம்ஸூங் 20 அல்லது 22 இன்ச் திரை வாங்குவது மிகவும் நல்லது.

அல்லது 17இன்ச் டெல், LG வாங்கலாம்.

கணினி மாணவர்களின் எதிர்காலம் என்ன?

பலரும் IT துறை முடங்கி விட்டதாக முடிவு செய்து MBA, B.Com, M.Com படிக்கச் சென்றுவிட்டார்கள். எவ்வாறு பல மாணவர் மற்றும் பெற்றோர்களால் தொலைநோக்குப் பார்வை இல்லாது முடிவு எடுக்க முடிகிறது என வியப்பாக உள்ளது.

இந்தவருடம் பட்டம் பெரும் மாணவர்கள் மட்டுமே சில பெருமுயற்சிகள் செய்து பணியில் சேரவேண்டிய நிலைமை இருக்கும்.

புதிய BE.CS, Bsc CS, MCA மாணவர்களுக்கு 3-4 வருடங்கள் கழித்து வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும்.

நீங்கள் திறமை இன்றி MBBS படித்தாலும், கிட்னி திருடும் மருத்துவமனை வைக்கலமே தவிர கைராசியான மருத்துவர் என பெயர் எடுக்க இயலாது.

நீங்கள் திருமணப் பத்திரிகையில் BE. MCA என போட விரும்பி படிப்பீர்களேயானால் உங்களுக்கு வேலை www pichumani.com இல் கிடைக்கலாம்.

திறமை வாய்ந்த மாணவர்களுக்கு கண்டிப்பாக பல நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளது.

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India