Saturday, January 7, 2012

Facebookல் Group உருவாக்குவது எப்படி?


         Facebookன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லக் காரணம் அதில் உள்ள பல வசதிகள் தான். அந்த வரிசையில் Facebookன் Group வசதி மிகவும் பயனுள்ள ஒரு வசதியாகும். நண்பர்களுக்குள் ஒரு குழு உருவாக்கிக் கொண்டு நீங்கள் விருப்பபட்டதை groupல் பகிரலாம்.  எப்படி Facebookல் group உருவாக்குவது என பார்ப்போம்.
Facebookல் Group உருவாக்குவது மிகவும் சுலபமான விஷயம் மொத்தமே 2 நிமிடங்கள் தான் ஆகும்.
  • முதலில் http://www.facebook.com/login.php சென்று  facebook தளத்தை open செய்து கொள்ளுங்கள்.
  • ஒரு window open ஆகும். அதில் உள்ள Create Group என்ற பட்டனை அழுத்துங்கள்.
  • அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதை போல ஒரு Pop-up window open ஆகும். அதில் நீங்கள் ஆரம்பிக்கும் குழுமத்தின்(Group) விவரங்களை கொடுக்கவும்.
Group Name – குழுமத்தின் பெயர்
Members – இந்த பகுதியில் உங்களின் நண்பர்களை இந்த குழுமத்தில் உறுப்பினர்களாக ஆக்கலாம்.
Privacy
Open - இதை தேர்வு செய்தால் உங்களின் குழுமத்தையும், குழுமத்தில் உள்ள பதிவுகளையும் அனைவரும் பார்க்க முடியும். உறுப்பினர்களாக இல்லை என்றாலும் கூட இவைகளை பார்க்க முடியும்.
Closed - இதை தேர்வு செய்தால் அனைவரும் உங்கள் குழுமம் மற்றும் அதில் உள்ள உறுப்பினர்கள் ஆகியவற்றை பார்க்கலாம். ஆனால் குழுமத்தின் பதிவுகளை பார்க்க முடியாது. உங்கள் குழுமத்தில் உறுப்பினர் ஆனால் மட்டுமே இந்த பதிவுகளை பார்க்க முடியும்.
Secret- உறுப்பினர்கள் மட்டுமே இந்த குழுமத்தையும் குழுமத்தின் பதிவுகளையும் பார்க்க முடியும்.
இவைகளை உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து கொண்டு கீழே உள்ள Create என்ற பட்டனை அழுத்தினால் உங்கள் குழுமம் தயாராகிவிடும். இனி அந்த குழுமத்தை உபயோகிக்க ஆரம்பியுங்கள்.

Youtube போல் Yahooவின் புதிய வீடியோ தளம்



Google  வழங்கும் ஒரு சேவை Youtube தளத்தில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டுகளிப்பதாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிறதாம். Google தளங்களில்  வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது Youtube தளம். இதைப் பார்த்து Yahoo நிறுவனம் Youtube தளத்திற்குப் போட்டியாக புதிய வீடியோ தளத்தை உருவாக்கி உள்ளது. இந்தத் தளத்திலும் Youtube தளத்தில் உள்ளதைப் போலவே பல்வேறு பிரிவுகளில் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம். Yahoo தளம் இந்தியாவில் உள்ள டிவி சேனல்கள் மற்றும் சினிமா தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டு காப்புரிமை வழங்கப்பட்ட original வீடியோக்களை மட்டுமே இந்தத் தளத்தில் பகிர்ந்துள்ள்ளது. Yahoo நிறுவனம் சில மாதங்களுக்கு முன் தான் முழு நீளத் திரைப்படத்தை காணும் Movieplex வசதியை கொண்டு வந்தது. அதற்குள் இப்பொழுது புதிய தளத்தை அறிமுகம் செய்துள்ளது. அவ்வளவும் original வீடியோக்கள் என்பதால் தரத்தைப் பற்றி கவலை இல்லை. வாசகர்கள் வீடியோக்களை upload செய்யும் வசதி இந்த தளத்தில் இல்லை.  மேலும் பல வசதிகளை கொண்டு வந்தால் இந்தத் தளமும் நல்ல வளர்ச்சியை பெரும் என்பதில் ஐயமில்லை. இந்த தளத்திற்கு செல்ல http://in.video.yahoo.com/

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India