Saturday, January 14, 2012

VLC Media Player-ன் தோற்றத்தை மாற்றுவதற்கு


  VLC Media Player உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான open source மென்பொருளாகும். இந்த மென்பொருளில் எக்கசக்கமான வசதிகள் நிறைந்து உள்ளது.
எந்த ஒரு தோற்றத்தையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தால் நாளடைவில் அது நமக்கு பிடிக்காமல் போய்விடும்.  அப்படி வருடக்கணக்கில் உபயோகித்துக் கொண்டிருக்கும் VLC Media Player ஒரே தோற்றத்தில் பார்த்து சலித்து விட்டதா? கவலையை விடுங்கள். VLC Media Player வெவ்வேறு அழகழகான உங்களுக்கு பிடித்த தோற்றத்திற்கு ஒரே நிமிடத்தில் மாற்றி விடலாம்.
முதலில் இந்த தளத்திற்கு http://www.videolan.org/vlc/skins.php செல்லுங்கள். இங்கு சுமார் 150க்கும் அதிகமான VLC தோற்றங்கள் இருக்கிறது. இதில் உங்களுக்கு பிடித்த தோற்றத்தை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு பிடித்த தோற்றத்தின் மீது click செய்தால் அந்த தோற்றம் பெரியதாக காட்டும். அதில் உள்ள download link அழுத்தி அந்த design தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள் அல்லது அனைத்து தோற்றங்களும் வேண்டுமென்றாலும் அதனையும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இப்பொழுது நீங்கள் தரவிறக்கம் செய்த .vlt கோப்பை (ZIP கோப்பாக இருந்தால் Extract செய்து கொள்ளுங்கள்) CUT செய்து C:\Program files\VideoLan\VLC\Skins என்ற இடத்தில் paste செய்யவும். நீங்கள் VLC பிளேயரை வேறு டிரைவில் நிறுவி இருந்தால் C க்கு பதில் அதை தெரிவு செய்து கொள்ளவும்.
சரியான இடத்தில் paste செய்ததும் அதை அந்த window மூடி விடுங்கள். இப்பொழுது VLC மீடியா பிளேயரை open செய்யுங்கள். அதில் Tools ==> Preferences என்பதை click செய்யுங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு window open ஆகும். அதில் SKIN பகுதியில் CUSTOM SKINஎன்பதை தெரிவு செய்து நீங்கள் முன்பு paste செய்த உங்களுக்கு விருப்பமான .vlt  கோப்பை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
vlt கோப்பை தெரிவு செய்யும் பொழுது already exit என்ற எச்சரிக்கை செய்தி வந்தால் அதில் Yes என்பதை அழுத்தி உங்களுக்கு விருப்பமான தோற்றத்தை தெரிவு செய்தவுடன் கீழே உள்ள Save என்பதை அழுத்துங்கள்.
இப்பொழுது உங்கள் VLC Media Player  close செய்து விட்டு மறுபடியும் open செய்யுங்கள். நீங்கள் விரும்பிய தோற்றத்திற்கு VLC Media Player மாறி இருக்கும்.

கணினியில் சிக்கிக் கொண்ட CDஐ வெளியே எடுப்பதற்கு



நீங்கள்  CD பயன்படுத்தும்  போது  CD கணினியின் CD driveவில் இருந்து வெளியே வராமல் உங்களை மோசமான நிலையில் சிக்க வைக்கும். எத்தனை முறை CD driveன் eject பட்டனை அழுத்தினாலும் அப்படியே CD drive வெளியே வராமல் இருக்கும். இந்த சூழ்நிலையில் என்ன செய்தால் CD drive திறக்கப்பட்டு CD  வெளியே வரும் என்பதனைப் பார்க்கலாம்.
முதலில் CD drive திறக்கப்பட்டு CD இருக்கும் அந்த plastic tray வெளியே நீண்டு வரவில்லை என்றால் கவலைப்படாதீர்கள். இந்தச் சூழ்நிலையை சமாளித்து CDயை கீழ்க்காணும் வழிகளைக் கையாண்டு வெளியே எடுக்கலாம்.
வழி 1:
My computer ஐகானில் click  செய்திடுங்கள். உங்கள் desktopல் இந்த ஐகான் இல்லை என்றால் நிச்சயம் start  மெனுவில் இருக்கும். இதனைத் திறந்தவுடன் உங்கள் கணினியின் driveகள் அனைத்தும் காட்டப்படும்.
இதில் Devices with removable stroage என்ற பிரிவில் CDயின் படத்துடன் ஒரு ஐகான் இருக்கும். அல்லது சிக்கிக் கொண்ட CD ஏதேனும் ஒரு நிறுவனம் தந்துள்ள package என்றால் நிறுவனம் தந்துள்ள ஐகானுடன் அந்த drive காட்டப்படும்.
இதன் மீது right click செய்திடுங்கள். கிடைக்கப் பெரும் மெனுவில் Eject என்ற பிரிவில் click செய்திடுங்கள். உங்கள் CD driveவில் உள்ள eject பட்டன் தேய்ந்து போய் நீங்கள் அழுத்துகையில் அதன் செயல்பாடு மேற்கொள்ளப்படாத சூழ்நிலையில் இந்த வழி செயல்படும். இதற்கும் CD drive திறக்கவில்லை என்றால் அடுத்த வழியைப் பார்க்கலாம்.
வழி 2:
பேப்பர் கிளிப் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். (ஜெம் கிளிப் என்றும் சிலர் இதனை அழைக்கின்றனர்) அதன் ஒரு முனையை பிரித்து நீட்டுங்கள். CD driveவின் eject பட்டன் அருகே சிறிய துளை இருப்பதைக் காணுங்கள். நிச்சயம் இதுவரை நீங்கள் இதனைக் கண்டு கொள்ளாமல் இருந்திருப்பீர்கள். இப்போது நிச்சயம் இதன் உதவி வேண்டியதிருக்கிறது. இந்த துளையில் மெதுவாக பிரித்த பேப்பர் கிளிப்பின் சிறிய கம்பியை உள்ளே செலுத்தவும். சிறிது உள்ளே செலுத்தியவுடன் அது ஒரு இடத்திற்கு மேல் செல்லாது.
இந்த இடத்தில் சிறிய அளவில், மிகச் சிறிய அளவில் அழுத்தம் கொடுக்கவும். Eject  செய்யும் போது இயங்கும் internal lock உள்ள இடத்தில் இந்த அழுத்தம் கிடைப்பதால் driveவின் கதவு திறக்கும்.
உடனே CDயை எடுத்துவிட்டு மீண்டும் driveவின் கதவினை மூடவும். மறக்காமல் பேப்பர் கிளிப் பின்னை எடுத்துவிடவும். ஏனென்றால் பலர் CD வெளியே வந்த சந்தோஷத்தில் பேப்பர் கிளிப்பைச் செருகியபடியே வைத்துவிடுவார்கள்.

தமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு



Read any book, லிட்பை உட்பட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க பல இணைய தளங்கள் உள்ளன. Open reading book என்னும் அந்த இணையத்தளம் தமிழில் புத்தகங்களை E-book வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.
முகப்பு பக்கத்தில் வலைப்பதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தப் புத்தகம் தேவையோ அதனை click செய்து படிக்கத் தொடங்கிவிடலாம்.
அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல், இலக்கியம், உடல் நலம், இசை என வகைகளின் பட்டியல் நீள்கிற‌து.  நாட்டுப்புற இலக்கியம், நாவல்கள், பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்ற‌ன.
சமீபத்தில்  தொடக்கப்பட்டு இந்த தளம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இணைய தள முகவரி http://www.openreadingroom.com/

வீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு Simpper Video Mail


        வீடியோவை பதிவு செய்து மின்னஞ்சல் செய்வதற்கு . Simpper Video Mail உதவுகிறது. அத்துடன் facebook நண்பர்களுடன் பகிரவும் அல்லது கணினியில் சேமிக்கவும் இதன் மூலம் முடிகிறது. Video recording செய்வதற்கு அடிப்படையான வசதிகளை வழங்கும் இந்த Tool மூலம் video record செய்வதற்கு சிவப்பு நிற பட்டனை அழுத்தியதும் தொடங்கலாம். Adobeல் ஏர் தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த மென்பொருள் இயங்குகிறது. நீங்கள் பதிவு செய்த வீடியோக்களை இணையத்திற்கு ஏற்ற வடிவில்  compress செய்துவிடுகிறது. குறிப்பு – இந்த மென்பொருளை பயன்படுத்த உங்கள் கணினியில் web camera மற்றும் மைக் வசதி இருக்க வேண்டும். Download செய்வதற்குhttp://www.simpper.com/NK/?url=vm

கடவுச்சொல்லுடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவதற்கு ஒரு தளம்


மின்னஞ்சல் (E-Mail) அனுப்ப பல்வேறு தளங்கள் உதவி செய்கிறன. அதில் மிகவும் பிரபலமான தளங்கள் Yahoo, GMail, HotMail ஆகும்.
இவற்றின் மூலம் அனுப்பபடும் மின்னஞ்சல்களை நாம் சாதாரணமாக open செய்து பார்க்க முடியும். இதற்கு உரிய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல் இருந்தால் போதுமானது.
நாம் word, pdf மற்றும் ஒரு சில கோப்புகளை காப்பதற்காக கடவுச்சொல்லுடன் (password) உருவாக்குவோம். இவ்வாறு உருவாக்கும் கோப்புகளை கடவுச்சொல் இருந்தால் மட்டுமே open செய்ய முடியும்.
இதனால் அவற்றில் உள்ள தகவல்கள் திருட வாய்ப்புகள் மிகவும் குறைவு. ஆனால் கடவுச்சொல் இல்லாமல் உள்ள கோப்புகளை மிகவும் எளிமையாக மற்றவர்களால் பார்க்கவோ அல்லது திருடிவிடவோ முடியும். இதுபோல் நாம் அனுப்பும் மின்னஞ்சல் ஒவ்வொன்றுக்கும் கடவுச்சொல் தந்தால்  எவ்வாறு இருக்கும். இதற்கு LOCKBIN என்னும் தளம் உதவி செய்கிறது.
http://www.lockbin.com/lockbin.php  தளத்திற்கு செல்லவும். அங்கு தோன்றும் window-வில் உங்களுடைய பெயர், உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல் போன்றவற்றை உள்ளிடவும்.
பின் நீங்கள் குறிப்பிட வேண்டிய செய்தியை தட்டச்சு செய்து பின் வேண்டிய கோப்பினை பதிவேற்றம் செய்து மேலும் CAPTCHA கோடினை உள்ளிட்டு இறுதியாக ஒப்பந்த check box-ல் Tick செய்து SUBMIT button அழுத்தவும். உங்களுடைய மின்னஞ்சல் நீங்கள் குறிப்பிட்ட முகவரிக்கு சென்றுவிடும்.
உங்களுடைய நண்பர் அந்த மின்னஞ்சலை open  செய்யும் போது ஒரு window open ஆகும். நீங்கள் கொடுத்த கடவுச்சொல்லை உள்ளிடுவதன் மூலமாக உங்களுடைய நண்பர் அந்த மின்னஞ்சல் தகவலை பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு உங்கள் தகவல் உங்கள் நண்பர்களுக்கு மிகவும் பாதுகாப்பாக சென்றடையும்.

பொங்கல் பண்டிகை


“பொங்கல் பண்டிகை’ என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம்.
போகி பண்டிகை
“போகி’யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு “போகி’ என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், “இந்திர விழா’வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.
மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை “போகி’யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, “பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.
ஆனால் இப்போதெல்லாம் போகியன்று “டயர்’களைக் கொளுத்தும் மூடத்தனம், பரவலாக நடக்கின்றது. இதனால் வளி மண்டலம் மாசு படுவதோடு, மனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றன. ஏற்கெனவே சுவாசக் கோளாறு உள்ளவர்கள், டயர்கள் வெளியிடும் நச்சுப் புகையால் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள். என்னதான் காவல் துறையினர் எச்சரித்தாலும், வீட்டுக்கு ஒரு காவலரையா நிறுத்த முடியும்? எனவே நாமே சமுதாயக் கட்டுப்பாடோடும், அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து, நோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
பொங்கல் பண்டிகை
ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.
பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, “பொங்கலோ பொங்கல்’ என்று கூறி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.
நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம். ஆயினும் “பால்கனி’யிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனம் செய்வார்கள். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.
கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடை வாங்காது போயினும், பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிவார்கள். நகரங்களில் ஏனோ தீபாவளியின் இடத்தை பொங்கல் பண்டிகை பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அது சரி, “மாடுகளை மேய்க்க மந்தைவெளி இங்கு இல்லையே’ என்ற பாடல் வரிகள் கூறுவதும் நியாயம்தானே?
எது எப்படியோ… பொங்கல் பண்டிகை தரும் மகிழ்ச்சி, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவானதே!
மாட்டுப் பொங்கல்
கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. “ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்’ என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. “ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது’ என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.
அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.
மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.
காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, “வீர நடை’ நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு “அங்க வஸ்திரம்’ போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே! ஆனால் அக்காளைகளுக்கு செயற்கையான முறைகளில் வெறியூட்டுவது தவறு. தக்க மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று, அதன் வீரத்தை வளர்ப்பதே விவேகமான செயலாகும்.
திருவள்ளுவர் தினம்
மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது. நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார்.
திருக்குறளில் சொல்லப்படாத விஷயமே இல்லை.
“உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை’ என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர். நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை. திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்தலே உண்மையான “வள்ளுவ பூஜை’யாகும். இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
காணும்பொங்கல்
பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது “கனு’ பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.
“காணும் பொங்கலும்’ இந்த நன்னாளே! அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்தது. இன்றைய “சீரியல்’ உலகில், வீட்டுக்கு வரும் சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பதுகூட அரிதாகிவிட்டது. இந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில் சபதமேற்போம்!
வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்! ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், “சூரியனை’ கண்ட பனிபோல விலகட்டும்! அதற்கு அந்த ஆதவனே நல்வழி காட்டட்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!

மொபைல் போன்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய வசதி IRCTC அறிவிப்பு



மணிக்கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்காமல் சுலபமாக ரயில் டிக்கெட்களை online-ல் முன்பதிவு செய்யும் வசதியை IRCTC வெளியிட்டு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இப்பொழுது பயணர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியான மொபைல் போன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இனி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வரிசையில் நிற்கவோ அல்லது கணினியை தேடிச் செல்லவோ வேண்டாம். எந்த இடத்தில் இருந்தும் மொபைல் மூலமாகவே ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யலாம். இதற்கு உங்கள் மொபைலில் இணைய இணைப்பு (GPRS) செயல்பாட்டில் இருப்பது அவசியம்.
  • டிக்கெட் முன்பதிவு செய்தல்
  • PNR நிலைமை அறிதல்.
  • பதிவு செய்த டிக்கெட்களை பார்க்கும் (Booked History) வசதி.
  • பதிவு செய்த டிக்கட்டை நீக்க (Cancel Ticket) என பல வசதிகளை மொபைல் மூலமே செய்து விடலாம்.
இது மட்டுமல்லாமல் மொபைல் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் பொழுது நீங்கள் பதிவு செய்த டிக்கெட் விவரம், ரயில் எண், PNR எண் போன்ற விவரங்கள் உங்கள் மொபைளுக்கே வந்துவிடுவதால் டிக்கெட் பரிசோதகரிடம் இந்த செய்தியை காட்டினாலே போதும் டிக்கெட் printout எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.இதற்காக ரயில்வே நிர்வாகம் ஒரு புதிய இணைய பகுதியை திறந்து உள்ளது. உங்கள் மொபைலில் https://www.irctc.co.in/mobile இந்த தளத்திற்கு சென்று டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம். முதல் முறை என்பதால் அந்த தளத்தில் பதிவு செய்து கொண்டு பிறகு டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளவும்.
கணினியில் E-Ticket முன்பதிவு செய்வதை போலவே உங்களின் Credit/Debit Cards உபயோகித்து மொபைலில் முன்பதிவு செய்து கொள்ளலாம். கட்டணமும் E-Ticket போலவே Slepper Class = Rs.10/- , குளிர் சாதன வசதிக்கு – Rs.20/- கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
இந்த புதிய வசதியின் மூலம் முதல்கட்டமாக ஒரு நாளைக்கு 1000 உறுப்பினர்கள் வீதம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வரவேற்ப்பை பொருத்து இந்த எல்லை மாற்றி அமைக்கப்படலாம்.

Run Comands Tamil


Start -> RUN ->Enter the command below

Sl.No
Command
பயன்
1
taskmgr
Task Manager ஐஓபன்செய்ய
2
cmd
இது command Prompt ஐஓபன்செய்யஉதவுகிறது
3
iexplore
இன்டெர்நெட்எக்ஸ்புளோரர்ஓபன்செய்ய
4
iexplore + “web address”
குறிப்பிட்டதளமுகவரிகொடுத்தால்நேரடியாகஅந்ததளத்தைஇன்டெர்நெட்எக்ஸ்புளோரர்வாயிலாகஓபன்செய்யலாம்.
5
compmgmt.msc
Computer Management ஓபன்செய்ய
6
services.msc
Services பகுதிக்குசெல்லலாம்.
7
eventvwr
Event Viewer பகுதிக்குஇதன்மூலம்செல்லலாம்
8
devmgmt.msc
உங்கள்கணினியில்இணைக்கப்பட்டுள்ள Device களை Manage செய்யஉதவுகிறது.
9
msinfo32
உங்கள்கணினிகுறித்தஅனைத்துதகவல்களும்அறிந்துக்கொள்ளஒரேஇடம்இது
10
cleanmgr
Disk Cleanup செய்யஇதுஉதவும்
11
mmc
Microsoft Management Console க்குசெல்ல
12
excel
MS Excel ஓபன்செய்ய (இன்ஸ்டால்செய்துஇருந்தால்)
13
powerpnt
MS Power Point ஓபன்செய்ய (இன்ஸ்டால்செய்துஇருந்தால்)
14
winword
MS Wordஓபன்செய்ய (இன்ஸ்டால்செய்துஇருந்தால்)
15
notepad
Notepad ஓபன்செய்ய
16
wordpad
Wordpad ஓபன்செய்ய
17
calc
Calculator ஓபன்செய்ய
18
mspaint
MS-Paint ஓபன்செய்ய
19
wmplayer
விண்டோஸ்மீடியாப்ளேயர்ஓபன்செய்ய
20
rstrui
System Restore பகுதிக்குஅழைத்துசெல்லும்
21
control
Control Panel ஐஓபன்செய்திட
22
control printers
உங்கள்கணினியில்இணைக்கப்பட்டுள்ள Device களைபார்க்க, பிரச்சினைகளைசரிசெய்ய
23
msconfig
24
dxdiag
25
osk

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India