Saturday, December 24, 2011

பதினெட்டாம் படி எது ?

பதினெட்டாம் பெருக்கு என்றும், 18 -ஆம் படி என்றும் வழிபாட்டுத் 
தலங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு உண்மை பொருள் 
என்ன? இறைவனை அடையும் மார்க்கங்கள் சரியை,கிரியை,
யோகம்,ஞானம். இந்த முறைகளிலே பயிற்சி பெற்றுக் கடந்தால்
இறைவனை உணர்ந்து அவனோடு ஐக்கியம் ஆகலாம் என்று
இந்து சமய நூல்கள் கூறுகின்றன. இந்த நாலு படிகளும் நான்கு 
நான்காக 4x4 = 16 படிகளாக உணர்ந்து பயிற்சி பெற்றுப் பெற்று 
அருள் அனுபவம் அடைந்தபின் இறைவனோடு ஒன்றிப் பேரின்ப 
நிலை எய்தபெறும். அவை பின் வருமாறு :-


சரியையில் - சரியை = திருகோயில் சென்று அலகிடல் மெழுகிடல்.
சரியையில் - கிரியை = தினம் எதாவது ஒரு மூர்த்தியை வழிபட்டு 
பழகுதல்
சரியையில் - யோகம் = தினம் எதாவது ஒரு மூர்த்தியை தியானித்து 
பழகுதல்
சரியையில் - ஞானம் = தியானித்த பவனில் பெரும் அனுபவம்.


கிரியையில் - சரியை = பூஜைக்கு வேண்டிய பொருள்களை தயாரித்தல்
கிரியையில் - கிரியை = ஆகம முறைப்படி ஐவகை சுத்தி,பஞ்சோபசாரம்
செய்தல்.
கிரியையில் - யோகம் = மனதுக்குள்ளே இறைவனை நினைத்து பூஜை,
தியானம், ஓமம் செய்தல்
கிரியையில் - ஞானம் = இதனால் ஏற்பட்ட அனுபவுணர்வுகளின் 
பயிற்சியால் பெறும் உணர்வு.


யோகத்தில் - சரியை = இயமம், நியமம் ஆசனம் பிரணாயமம்.
யோகத்தில் - கிரியை = பிரத்தியாகாரம் தாரணை
யோகத்தில் - யோகம் = தினசரி குறிப்பிட்ட நேரத்தில் இறைவன் 
ரூபத்தை தியானித்தல்
யோகத்தில் - ஞானம் = தியான பொருளோடு சமாதி கூடிப் பெறும் உணர்வு


ஞானத்தில் - சரியை = கேட்டல்
ஞானத்தில் - கிரியை = சிந்தித்தல்
ஞானத்தில் - யோகம் = தெளிதல்
ஞானத்தில் - ஞானம் = நிட்டை கூடுதல்.


ஆகா பதினாறு படிகளில் பயிற்சி பெற்று பாக்குவம் பெற்ற பின்பு
ஆன்மா 17-வது படியில் நின்று இறைவனது பேரின்ப வெள்ளத்தில்
தானும் கலந்து ஆன்மா லாபத்தை அடையும்.இந்த படிகளை 
நின்று இறைவனின் அருளை பெறும். இறைவனின் அருளை பெற்ற
ஆன்மா 18 வது படியில் நின்று பயிற்சி பெற்று கடக்க வேண்டிய 
உலக நினைப்புகளையும் ஆசை அகங்காரங்களையும் நீக்கி தினசரி
நான்கு நாழிகை நேரமாவது (96 நிமிடம்) இறைவனதுதிருவடியில்
மனதை செலுத்த வேண்டும்.


மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலுநாழி உம்முளே நாடியே இருந்தபின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்;
ஆலம்உண்ட கண்டர்ஆணை அம்மைஆணை உண்மையே. 


இதை விடுத்தது வெறும் கல்லால் செதுக்கப்பட்ட 18 வாயிற்படிகளைக் 
காலால் மிதித்துகடந்து சென்றால் கோவிலை பார்க்கலாம். கோவில்
கருவறையில் பதிக்க பட்டுஇருக்கும் இறைவனின் குறியீடான 
அந்த சிலையின் ரகசியத்தை ஒருபோதும் உணர்ந்து அடைய முடியாது. 
மேற்குறிபிட்ட 18 படிகளிலே பயிற்சி பெறுவதே பக்தியும் 
வழிபாடும் ஆகும். 


18 படிகளை தழுவி பொடியிட்டு பூவிட்டு வழிபடுவது அல்ல இந்நெறி.

0 comments:

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Hot Sonakshi Sinha, Car Price in India